இந்திய ரிசர்வ் வங்கி இந்த வார தொடக்கத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான இறையாண்மை தங்கப் பத்திரங்களின் முதல் தவணையை வெளியிட்டுள்ளது.
இந்தத் தங்கப் பத்திரத்தின் ஒரு கிராம் விலை ரூ.5,926க்கு கிடைக்கிறது. சந்தாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 29 ஆகும்.
மேலும், இறையாண்மை தங்கப் பத்திரத்தில் ஒரு வருடத்திற்கு 2.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
இறையாண்மை தங்கப் பத்திரம்
இறையாண்மை தங்கப் பத்திரங்களைப் பொறுத்தவரை, ஆரம்ப முதலீட்டின் அளவு மீது அரசாங்கம் உத்தரவாதமான 2.5 சதவீத வருவாய் விகிதத்தை வழங்குகிறது.
வட்டியானது அரையாண்டுக்கு ஒருமுறை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். கடைசி வட்டி முதிர்வின்போது அசல் தொகையுடன் செலுத்தப்படும். பத்திரத்தின் காலம் 8 ஆண்டுகளாக இருக்கும் போது, ஐந்தாவது வருடத்திற்குப் பிறகு பணம் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.
அதேநேரம், நிலையான வைப்புத்தொகைகளுக்கு, தவணைக்காலம் மற்றும் தொகையைப் பொறுத்து வருமான விகிதம் 3.5 முதல் 8 சதவீதம் வரை மாறுபடும்.
இந்த நிலையில், தற்போது, 9 முதல் 10 ஆண்டுகள் முதிர்வு கொண்ட G-sec பத்திரம் 7.47 சதவீதத்தை வழங்குகிறது.
இந்த நிலையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை சற்று எளிதாக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகளவில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“