2023-24 ஆம் ஆண்டிற்கான இறையாண்மை தங்கப் பத்திரங்கள் முதல் தவணையாக ஜூன் 19-23 வரையிலும், இரண்டாவது தவணையாக செப்டம்பர் 11-15 வரையிலும் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தங்கப் பத்திரங்களில் தனிநபர் மட்டுமின்றி பல்கலைக்கழகங்கள், அறக்கட்டளை மற்றும் மைனர் பெயரிலும் முதலீடு செய்யலாம்.
விண்ணப்ப படிவம்
1) விண்ணப்பதாரரின் முழுப் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு, படிவம் 'A' இல் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
2) ஒவ்வொரு விண்ணப்பத்திலும் விண்ணப்பப் படிவத்தின் அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தகவல்கள் இருக்க வேண்டும்.
3) ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் பான் (PAN) எண் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
4) விண்ணப்பத்தின் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்ட உடன் "பி" படிவத்தில் ஒப்புகை ரசீது வழங்கப்படும்.
5) முழுமையடையாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அரசுப் பத்திரங்கள் சட்டம், 2006 (38 இன் 2006), மற்றும் அரசுப் பத்திரங்கள் ஒழுங்குமுறைகள், 2007 ஆகியவற்றின் விதிமுறைகளின்படி இறையாண்மை தங்கப் பத்திர சான்றிதழ்கள் வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“