கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயனடையும் வகையில் பல்வேறு வங்கிகள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தின. எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹச்டிஎஃப்சி போன்ற வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி கிடைக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான கால அவகாசத்தை எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பேங்க் ஆப் பரோடா வங்கிகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்களுக்கான ஐசிஐசிஐ வங்கி அதன் கோல்டன் இயர்ஸ் எஃப்டியை 20 அக்டோபர் 2021 வரை நீட்டித்துள்ளது.
எஸ்பிஐ
5 வருடங்கள் மற்றும் அதற்கு கூடுதலான கடன் கால அளவு உள்ள கால வைப்பு தொகைகளுக்கு சாதாரண மக்களுக்கு பொருந்தும் விகிதத்தை விட மூத்த குடிமக்களுக்கு 80 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டியை எஸ்பிஐ வழங்கும். தற்போது, எஸ்பிஐ ஐந்தாண்டு நிலையான வைப்புத்தொகைக்கு 5.4 சதவீத வட்டியை பொது மக்களுக்கு வழங்குகிறது. சிறப்பு FD திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் 6.20 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.
ஐசிஐசிஐ
ICICI வங்கி நிலையான வைப்புகளில் 80 பிபிஎஸ் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. ICICI வங்கி கோல்டன் இயர்ஸ் எஃப்.டி திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 6.30 சதவீதம் வட்டி விகிதத்தை அளிக்கிறது.
ஹெச்டிஎஃப்சி
HDFC வங்கி இந்த வைப்புகளில் 75 பிபிஎஸ் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு பொருந்தும் வட்டி விகிதம் 6.25 சதவீதமாக இருக்கும்.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கான சேமிப்பில் 6.25 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது. இந்த சேமிப்புகளுக்கு 100 அடிப்படைப் புள்ளிகள் அதிகமான அளவு வட்டி லாபம் வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil