எஸ்பிஐ அம்ரித் கலாஷ் மற்றும் ஐடிபிஐ வங்கியின் மஹோத்ஸவ் எஃப்டி திட்டங்கள் வரும் 15ஆம் தேதியோடு முடிகின்றன.
400 நாள்கள் காலக்கெடு கொண்டு அம்ரித் கலாஷ் திட்டத்துக்கு எஸ்பிஐ சாதாரண குடிமக்களுக்கு 7.1 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.6 சதவீதம் வட்டியும் வழங்குகின்றது. இந்தத் திட்டம் ஆக.15ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது.
அதேபோல் ஐடிபிஐ வங்கியின் மஹோத்ஸவ் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் இரண்டு வகையில் கிடைக்கின்றன. இதில் 375 நாள்கள் கொண்ட எஃப்.டி.க்கு சாதாரண மக்களுக்கு 7.10 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.60 சதவீதமும் ரிட்டன் வழங்குகின்றன.
அதேபோல் 444 நாள்கள் கொண்ட திட்டத்துக்கும் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் ஆக.15ஆம் தேதியோடு முடிவுக்கு வருகின்றன.
எஃப்.டி.க்கு 9 சதவீதம் வட்டி
யூனிட்டி மற்றும் சூர்யோடே உள்ளிட்ட ஸ்மால் வங்கிகள் சில குறிப்பிட்ட காலஅளவு கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9 சதவீதம் வட்டி வழங்குகின்றன.
பொதுவாக ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படும். இதனை முதலீட்டாளர்கள் மனதில் வைத்துக்கொள்வது சிறந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“