பண வீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் வங்கிகள் தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளன.
மேலும் வங்கிகள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் 2023 மார்ச் 31ஆம் தேதியுடன் முடிகின்றன.
எஸ்.பி.ஐ.
எஸ்.பி.ஐ., சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் பிப்ரவரி 15, 2023 முதல் தொடங்கப்பட்டது.
இது, 7.10% வட்டி விகிதத்துடன் 400 நாள்கள் (அம்ரித் கலாஷ்) சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் ஆகும். இந்தத் திட்டத்தில் மூத்த குடிமக்கள் 7.60% வட்டி விகிதத்திற்கு தகுதியுடையவர்கள். இத்திட்டம் மார்ச் 31, 2023 வரை அமலில் இருக்கும்.
HDFC வங்கி
HDFC வங்கி, மே 2020 இல் மூத்த குடிமக்கள் பராமரிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த சிறப்பு FD திட்டத்தின் கீழ், ஐந்து வருடங்கள் ஒரு நாள் முதல் 10 வருடங்கள் வரை 5 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட்களுக்கு 0.25% (தற்போதுள்ள பிரீமியமான 0.50%க்கு மேல்) கூடுதல் வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் வங்கி 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஐடிபிஐ நம்ம சீனியர் சிட்டிசன் டெபாசிட்
ஒரு வருடம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை (444 நாட்கள் & 700 நாட்கள் தவிர) முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.50% வட்டி வழங்கப்படும்.
அதேபோல், மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
புதிய டெபாசிட்கள் மற்றும் திட்ட காலத்தில் புதுப்பிக்கப்பட்ட டெபாசிட்களுக்கு கூடுதல் விகிதம் கிடைக்கும். இந்த திட்டம் மார்ச் 31, 2023 வரை செல்லுபடியாகும்
இந்தியன் வங்கி இந்த் சக்தி 555 நாள்கள்
இந்தியன் வங்கி IND சக்தி 555 நாட்கள் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு 7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50% வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, குறைந்தபட்ச முதலீடு ரூ.5000 ஆகும். அதிகபட்ச முதலீடு ரூ.2 கோடிக்கும் குறைவாக இருத்தல் வேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட் நாள்கள் 555 ஆகும்.
பஞ்சாப் சிந்த் வங்கி
பி.எஸ்.பி. ஃபேபுலஸ் 300 நாள்கள் (PSB Fabulous 300 Days)
PSB ஃபேபுலஸ் 300 நாள்கள் திட்டத்தின் கீழ், வங்கி பொது மக்களுக்கு ஆண்டுக்கு 7.50%, மூத்த குடிமக்களுக்கு 8% மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8.35% வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் காலம் 300 நாள்கள் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/