Sbi Fixed Deposit | Fixed Deposits | பல்வேறு வங்கிகள் வழக்கமான வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏற்றவாறு அதிக வட்டி விகிதங்களுடன் சிறப்பு வைப்புத் திட்டங்களை வழங்குகின்றன. இந்த பிரத்தியேக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் வருகின்றன.
அவை வங்கிக்கு வங்கி மாறுபடும். இந்த நிலையில், ஐ.டி.பி.ஐ வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி போன்ற வங்கிகளின் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30, 2024 வரை அம்ரித் கலாஷ் சிறப்பு எஃப்.டி திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் சாதாரண குடிமக்களுக்கு 7.10 சதவீதம் முதலீடு வழங்கப்படும். மூத்தக் குடிமக்களுக்கு 7.60 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதேபோல், எஸ்.பி.ஐ வீகேர் திட்டத்தில் 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் செப்.30, 2024 வரை அமலில் இருக்கும்.
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி 222 நாள்கள் சிறப்பு எஃப்.டிக்கு 7.05 சதவீதம் வட்டியும், 333 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.10 சதவீதம் வட்டியும், 444 நாள்கள் எஃப்.டிக்கு 7.25 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த எஃப்.டி திட்டங்களில் ஜூன் 30, 2024 வரை முதலீடு செய்யலாம்.
இந்தியன் வங்கி சிறப்பு எஃப்.டி
இந்தியன் வங்கி 300 மற்றும் 400 நாள்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்கிவருகிறது. இந்தத் திட்டங்களில் முறையே 7.05, 7.55 சதவீதம் என வட்டி வழங்கப்படுகிறது. மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் வட்டி கூடுதலாக வழங்கப்படும். சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிலும் கூடுதலாக வட்டி விகிதங்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய 2024 ஜூன் 30 கடைசி நாளாகும்.
ஐ.டி.பி.ஐ வங்கி சிறப்பு எஃப்.டி திட்டங்கள்
ஐ.டி.பி.ஐ வங்கி அதன் உத்சவ் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு (எஃப்டிகள்) சிறப்பு விகிதத்தை வழங்குகிறது. பொது குடிமக்களுக்கு, 300 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் FDகளில் 7.05% வங்கி வழங்குகிறது. இதற்கிடையில், மூத்த குடிமக்கள் 300 நாட்களுக்கு உத்சவ் எஃப்டிகளில் 7.55% பெறுகிறார்கள். 375 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் FDகளுக்கு, வங்கி 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
375 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் எஃப்டிகளுக்கு மூத்த குடிமக்கள் 7.6% சம்பாதிக்கலாம். 444 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் எஃப்டிகளுக்கு, வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 7.2% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய ஜூன் 30, 2024 கடைசி நாளாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“