Advertisment

விமானத்தில் பயணிக்க ரூ.1,299 போதும்... ஸ்பைஸ்ஜெட்டின் செம்ம ஆஃபர்...

Spicejet Offers Sale on Air Flight Booking : டிக்கெட்டுகளை வாங்க ஆகஸ்ட் 30ம் தேதியே இறுதி நாள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SpiceJet Desh-Videsh Ghoomo Sale, Spicejet Air Sale Offer, Spicejet Flight Booking Sale

SpiceJet Desh-Videsh Ghoomo Sale

SpiceJet Desh-Videsh Ghoomo Sale : ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய சலுகைகளை பயன்படுத்தி நீங்கள் அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி வரையில் மிகக் குறைவான கட்டணத்தில் விமானத்தில் பயணத்துக் கொள்ளலாம். ஜெட் ஏர்வேஸ் தற்காலிகமாக தங்களின் விமான சேவைகளை முற்றிலும் நிறுத்தியுள்ள நிலையில்,  உள்நாட்டு விமான சேவைகளில் இதர நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் தர துவங்கியுள்ளன. சேவைகள் அதிகரிப்பதும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ஆஃபர்களையும் அறிவித்து வருகின்றன.

Advertisment

இந்நிலையில் நேற்று ஸ்பைஸ் ஜெட் தங்களின் பயணிகளுக்கு செம ஸ்பைசியான ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 30ம் தேதி வரை நீடிக்கும் இந்த தேஷ் விதேஷ் கூமோ சேல் ”Desh-Videsh Ghoomo Sale”-ல் உள்நாட்டு விமான சேவைகளுக்கான டிக்கெட்களை நீங்கள் வெறும் ரூ.1,299-க்கு விண்ணப்பத்துக் கொள்ளலாம். வெளிநாட்டு விமான சேவைகள் ரூ. 3,999 கட்டணத்தில் இருந்து துவங்குகிறது. இந்த விமான டிக்கெட்டுகளை இந்த நான்கு நாட்களுக்குள் நீங்கள் பெற்றுக் கொண்டால், அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் அந்த பயணச்சீட்டுகளை பயன்படுத்தி நீங்கள் பயணித்துக் கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால் இந்த டிக்கெட்டுகளுடன் வேறெந்த காம்போ ஆஃபர்களும்  உங்களுக்கு இல்லை. மேலும் இது ஒன் - வே டிக்கெட்டுகளுக்கான ஆஃபர் மட்டும் தான் என்பதையும் நீங்கள் மறந்துவிட வேண்டாம்.  ஏப்ரல் 1ம் தேதி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 130 புதிய விமான சேவைகளை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது, மேலும் ஏப்ரல் முதல் ஜூன் காலக்கட்டங்களில் ஸ்பைஸ்ஜெட் 32 புதிய விமானங்களை வாங்கியுள்ளது. 27 போயிங் 737 என்.ஜி. ஏர்க்ராஃப்ட், 4 - Q400s மற்றும் B737 freighter விமானங்கள் அதில் அடக்க்கம். ஜூனுக்குப் பிறகு 107 விமானங்களை வாங்கியுள்ளது இந்நிறுவனம்.

Travel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment