ரூ.899 கட்டணத்தில் விமானப் பயணம்... உங்க பெற்றோரையும் அழைச்சிட்டு போங்க! முழு விவரம் இங்கே

SpiceJet, IndiGo, Air India Offer Discount On Flight Tickets, Details Here

வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ரூ.899லிருந்து தொடங்கி ரூ.3,699 வரை சிறப்புக் கட்டணச் சலுகை அறிவித்துள்ளது. இண்டிகோ ரூ.899லிருந்தும். ஏர் இந்தியா ரூ.1,000 லிருந்தும் சிறப்புக் கட்டணம் அறிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் கட்டண தள்ளுபடி

உள்ளூர் விமான சேவைகளுக்கு ஸ்பைஸ்ஜெட் சிறப்பு கட்டணச் சலுகை அறிவித்துள்ளது. அனைத்து செலவினங்களும் உள்ளடக்கப்பட்டு ரூ.899லிருந்து டிக்கெட் விலை தொடங்குகிறது. பிப்.10, 2019 வரை இக்கட்டண சலுகையில் டிக்கெட் புக்கிங் செய்யலாம். இந்தச் சலுகை விலையில், செப்.25 2019 வரை பயணம் செய்யலாம். அதுமட்டுமின்றி, SBI கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட் புக்கிங் செய்தால், விமானக் கட்டணத்தில் 10 சதவிகிதம் தள்ளுபடியும், இலவச Check-in ஆகியவையும் வழங்கப்படுகிறது.   www.spicejet.com.

இண்டிகோ கட்டண தள்ளுபடி

ஸ்பைஸ் ஜெட் போலவே, இண்டிகோவிலும் உள்ளூர் விமான சேவைகளில் ரூ.899-லிருந்து(அனைத்து செலவினங்கள் உட்பட) கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. பிப்.9 டிக்கெட் புக்கிங் செய்ய கடைசி நாளாகும். பிப். 20, 2019 லிருந்து ஏப்ரல் 15, 2019 காலக்கட்டம் வரையில், பயணிகள் இந்தக் கட்டணச் சலுகையில் பயணிக்கலாம்.  www.goindigo.in

ஏர் இந்தியா கட்டண தள்ளுபடி

ஏர் இந்தியாவின் டிக்கெட் கட்டணச் சலுகை ரூ.1000லிருந்து தொடங்குகிறது. நள்ளிரவில் இயக்கப்படும் ஏர் இந்தியா சேவையில் இந்த சலுகைக் கட்டணம் அளிக்கப்படுகிறது. பெங்களூரு – அகமதாபாத், டெல்லி – கோவை மற்றும் டெல்லி – கோவா வழித்தடங்களில் இந்தக் கட்டணச் சலுகையில் பயணிகள் பயணிக்கலாம் என www.airindia.in தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close