இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் (SpiceJet அயோத்தியை சென்னை, பெங்களூரு மற்றும் மும்பையுடன் இணைக்கும் இடைநில்லா விமானங்களை பிப்ரவரி 1, 2024 முதல் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த வழித்தடங்களில் 189 இருக்கைகள் கொண்ட போயிங் 737 ரக விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த வாரம், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கு அயோத்தி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 100 பட்டய விமானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று கூறினார்.
இதற்கிடையில், மும்பையுடன் ஸ்ரீநகரையும், சென்னையுடன் ஜெய்ப்பூரையும், பெங்களூருவை வாரணாசியையும் இணைக்கும் புதிய விமானங்களை பிப்ரவரி 1 முதல் ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.
சென்னை-அயோத்திக்காக விமான டிக்கெட் ரூ.6,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைத்தார்.
சென்னயில் இருந்து அயோத்திக்கு 2.35 மணி நேரத்தில் விமானம் சென்றுவிடும் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“