Advertisment

அரசியலில் நுழைகிறாரா? ஸ்ரீதர் வேம்பு பதில் என்ன பாருங்க!

ஸ்ரீதர் வேம்பு ஸோகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவர் அரசியலில் நுழைகிறார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதற்கு ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sridhar vembu

ஸ்ரீதர் வேம்பு ஸோகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவர் அரசியலில் நுழைகிறார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதற்கு ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு ஸோகோவை ஒரு பெரிய மென்பொருள் சேவை (SaaS) நிறுவனமாக உருவாக்கினார். சென்னையைச் சேர்ந்த கிளவுட் சர்வீசஸ் நிறுவனமான ஸோகோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, நீண்ட கால தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பில் இருந்த நிலையில், அவர் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதே நேரத்தில், ஸ்ரீதர் வேம்பு தலைமை விஞ்ஞானியாக பொறுப்பேற்பார், அங்கே அவர் ஸோகோ நிறுவனத்தின் ஆழமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார், கிராமப்புற மேம்பாட்டுக்கான அவரது தனிப்பட்ட பணியில் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் ஸ்ரீதர் வேம்பு அரசியலில் நுழைய உள்ளதாக சமூக வலைதளங்களில், சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் தான் வெடித்து சிரித்ததாகவும் இந்த செய்திகள் வதந்திகள் என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “நான் அரசியலில் சேருவது பற்றி ஒரு 'செய்தி' பரவி வருவதாகக் கேள்விப்பட்டேன். இதைக் கேட்டதும் நான் வெடித்துச் சிரித்தேன்” என்று வியாழக்கிழமை எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும்,  “எனக்கு இப்போது ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மிகவும் சவாலான புதிய பங்கு உள்ளது. மேலும், எந்த வழியும் இல்லை, எனக்கு அரசியலுக்கு நேரமில்லை. அதற்கு மேல், நான் அரசியலில் சேருவது பற்றி யாருடனும் எதுவும் விவாதிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisement

ஸ்ரீதர் வேம்பு தனி ஒருவராக ஸோகோவை ஒரு பெரிய மென்பொருள்-சேவை (SaaS) நிறுவனமாக உருவாக்கினார். ஸோகோவின் கிளவுட் தொகுப்பில் உற்பத்தித்திறன், ஒத்துழைப்பு, விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் பின்-அலுவலக கணக்கியல் ஆகியவற்றிற்கான கருவிகள் உள்ளன. இந்த நிறுவனம் வணிக மென்பொருள் சந்தையில் மைக்ரோசாப்ட், கூகுள், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் ஆரக்கிள் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. ஸோகோ அதன் 55+ வணிக பயன்பாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 7,00,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.

1989-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி-யில் மின் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, ஸ்ரீதர் வேம்பு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். 2005-ம் ஆண்டு ஸோகோவை நிறுவுவதற்கு முன்பு, அமெரிக்காவின் சான்டியாகோவில் உள்ள குவால்காமில் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2024-ம் ஆண்டில் இந்தியாவின் 39வது பணக்காரராக ஸ்ரீதர் வேம்புவை மதிப்பிட்டது, அவரது நிகர மதிப்பு $5.85 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

Sridhar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment