வணிக சிலிண்டர் விலை உயர்வு முதல் ஆதார் அப்டேட் கட்டணம் வரை... உங்கள் பர்ஸை பதம் பார்க்கும் நிதி மாற்றங்கள்

ஆதார் அட்டை, வருமான வரி முதல் சிலிண்டர் விலை என இந்த மாதம் முதல் நிதி தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள மாற்றங்கள், உங்கள் பர்ஸை பதம் பார்க்க வாய்ப்புள்ளது.

ஆதார் அட்டை, வருமான வரி முதல் சிலிண்டர் விலை என இந்த மாதம் முதல் நிதி தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள மாற்றங்கள், உங்கள் பர்ஸை பதம் பார்க்க வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
New Update
Indian money

இன்னும் 31 நாள்களில் நடப்பு ஆண்டு முடிவடையவுள்ளது. இதனிடையே, நிதி தொடர்பான சில மாற்றங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையலாம். அல்லது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கலாம். இதில் சிலிண்டர் விலை, வைப்பு நிதியின் வட்டி விகிதம், ஆதார் புத்துப்பித்தலின் கட்டணம் போன்றவை அடங்கும்.

டிசம்பரில் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்:

Advertisment

சிலிண்டர் விலை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலையை ரூ 16.50 ஆக உயர்த்தியுள்ளது. அதன்படி, டெல்லியில் இதன் விலை ரூ. 1818 ஆக உள்ளது. மும்பையில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 1771 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 1927 ஆகவும், சென்னையில் ரூ. 1980 ஆகவும் உள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
மேலும், 5 கிலோ இலவச வர்த்தக சிலிண்டர்களின் விலையும் ரூ. 4 உயர்த்தப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ் ட்ரேஸ்பிலிட்டி: எஸ்.எம்.எஸ் ட்ரேஸ்பிலிட்டி ஆணை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நீங்கள் பெறும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்-ம் ட்ரேஸ் செய்யப்படும் மற்றும் எந்த சந்தாதாரருக்கும் ட்ரேஸ் செய்ய முடியாத செய்தியை அனுப்ப முடியாது. இதற்கான காலக்கெடு முன்னதாக அக்டோபரில் இருந்தது, ஆனால் பின்னர் டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டது. எஸ்.எம்.எஸ் டிரேசபிலிட்டி, செய்திகளை வழங்குவதை தாமதப்படுத்தாது என்று TRAI சமீபத்தில் தெளிவுபடுத்தியது.

இது உங்கள் வருமானத்தை நேரடியாகப் பாதிக்காவிட்டாலும், முறைகேடான இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களை ஏமாற்ற முயன்ற மோசடி செய்பவர்களால் அனுப்பப்படும் பல தவறான செய்திகளைப் பெறுவதிலிருந்து இது உங்களைத் தவிர்க்கும்.

Advertisment
Advertisements

இலவச ஆதார் புதுப்பிப்பு: டிசம்பர் 14 வரை, பயனாளர்கள் தங்கள் விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்கலாம். ஆனால் இந்த காலக்கெடுவிற்குப் பிறகு, கட்டணங்கள் வசூலிக்கப்படும். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தைக் கண்டறிய புவன் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

ஐடிபிஐ வைப்பு நிதி விகிதங்கள்: முன்னதாக உத்சவ்  வைப்பு நிதி விகிதங்களுக்கான காலக்கெடு டிசம்பர் 1 ஆக இருந்தது. ஆனால் இப்போது அது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வட்டி விகிதங்கள் 7.05 சதவீதம் முதல் 7.35 சதவீதம் வரை சாதாரண  நபர்களுக்கு மற்றும் மூத்த குடிமக்கள் கூடுதலாக .50 சதவீதம் பெற உரிமை உண்டு. 

காலதாமதமான வருமான வரி அறிக்கை (ITR): முந்தைய ஆண்டுக்கான வருமானத்தை உரிய தேதிக்குள் தாக்கல் செய்ய தவறினால், தாமதமான வருமானத்தை நீங்கள் தாக்கல் செய்யலாம். தாமதமான ITR ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆகும்.

எனவே இன்று முதல், ஆண்டு இறுதி வரை தாமதமான ITRஐ நீங்கள் தாக்கல் செய்யலாம். தாமதமாக ITR தாக்கல் செய்யும் போது அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Gas Cylinder Aadhar Card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: