state bank atm sbi atm state bank of india state bank atm : எஸ்பிஐ ஏடி.எம்.ல் பணம் எடுக்க போறீங்களா? எல்லா ரூல்ஸூம் மாறியாச்சி. நீங்க பணம் எடுக்க நிறைய விஷயம் இனி செய்ய வேண்டும். ஏன்னென்ன ரூல்ஸ் பார்க்கலாம் வாங்க.
state bank atm sbi atm ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம் என அந்த வங்கி அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் பயனர்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம் என அந்த வங்கி அறிவித்துள்ளது.
வங்கியின் இந்த அறிவிப்பின்படி, ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, பணம் எடுக்கும்போது அவர்களது வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP ஒன்று வரும் எனவும், இதனைப் பதிவிட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும் எனவும் வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு பத்தாயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த OTP நடைமுறை பின்பற்றப்படும் எனவும், மொபைல் எண்ணை வங்கி கணக்கோடு இணைக்காதவர்கள் சம்மந்தப்பட்ட வங்கியின் கிளை அல்லது ஏ.டி.எம் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை பணம் எடுக்கும்போது மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil