state bank fixed deposit : நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்யப்படும் பிக்ஸ்ட் டெபாசிட்களுக்கான வட்டி விகிங்களை குறைத்தது.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி 7 நாள் முதல் 45 நாட்கள் வழங்கப்பட்டு வந்த 5.75 சதவீத வட்டி விகிதம், 5 சதவீதமாகவும், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான பிக்ஸ்ட் டெபாசிட்டுகளுக்கான வட்டி 6.25 சதவீகிதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டது.
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 6.35 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகவும், 211 நாட்கள் முதல் ஒராண்டுக்குள் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி 6.40 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
1 முதல 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி 7 சதவீதத்தில் இருந்து 6.80 சதவீதமாகவும், 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 6.75 சதவீதத்தில் இருந்து 6.70 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
3 முதல் 5 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 6.70 சதவீத்தில் இருந்து 6.60 சதவீதமாகவும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி 6.60 சதவீத்தில் இருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டது.
வட்டி இல்லாமல் கடன் வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய வங்கி இதுதான்!
இதுபோலவே மூத்த குடிமக்கான சிறப்பு கூடுதல் வட்டி விகிதங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த வட்டி மாற்றம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் பலருக்கும் இதுக் குறித்து முழுமையான விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை. இந்த வட்டி மாற்றம் ஏற்கனவே நீங்கள் தொடர்ந்து வரும் பிக்சர் திட்டங்களுக்கும் பொருந்தும். எனவே, உடனே வங்கிக்கு புறப்ப்ட்டு இதுக் குறித்த விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்க