state bank of india loan interest : இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான எம்சிஎல்ஆர் (MCLR) வட்டி விகிதத்தை 0.05 சதவீதமாக குறைத்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்த நிலையில் அதை ஏப்ரல் 10-ம் தேதி முதல் 8.50 சதவீதமாகக் குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்து அறிவித்ததை அடுத்து எஸ்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எம்சிஎல்ஆர் வட்டி விகித குறைப்பு மட்டுமில்லாமல் எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதம் ஏப்ரல் 10 முதல் 8.60 முதல் 8.90 சதவீதமாக இருக்கும். தற்போது இது 8.70 முதல் 9.00 சதவீதமாக உள்ளது.
2019 மே 1-ம் தேதி முதல் எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் உள்ள 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்புத் தொகை வைத்திருந்தால் வட்டி விகிதம் 3.50 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகக் குறையும்.
மேலும் படிக்க.. இந்தியன் ஒவர்சீஸ் வாடிக்கையாளர்களை கட்டாயம் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்துடன் சேமிப்பு கணக்குகளையும் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்ததினால் இந்த வட்டி விகித குறைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.