state bank money transfer sbi : முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (1.7.20) முதல் வரும் 4-ம் தேதிவரை வங்கிகளில் பொதுமக்களுக்கான சேவை கிடையாது. வங்கிகளில் சம்பளத்தை எடுக்க காத்துக் கொண்டு இருப்பவர்கள் இந்த தகவலை தெரிந்துக் கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்கு முடிந்த வரை பகிருங்கள்.
Advertisment
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செயல்பாட்டில் இருந்து வந்தது.
state bank money transfer sbi : வங்கி சேவை கிடையாது!
அதன் பின்பு, கொரோனா தாக்கத்தை மேலும் கட்டுக்குள் கொண்டு வர சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 4 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக முதல்வர் பழனிசாமி நேற்றுமுன் தினம் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் உள்ள வங்கிக் கிளைகள் இன்று (ஜூலை 1) முதல் 4-ம்தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். இதில் பொதுமக்களுக்கான சேவை கிடையாது.பெட்ரோல் பங்க்குகள், சமையல் காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் ஏஜென்சிகள் ஆகியவற்றுக்கான பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம்களில் பணம் நிரப்புவது உள்ளிட்ட அத்தியாவசிய சேவை மட்டுமே நடைபெறும்.
இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில அளவிலான வங்கியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.மொகந்தா தெரிவித்துள்ளார்.