state bank netbanking online : எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இனிமேல் அளவில்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் பல நாள் கோரிக்கை இன்று பூர்த்தி ஆகி இருப்பது உண்மையில் சநந்தோஷமான விஷயம் தான். அதுமட்டுமில்லை எஸ்பிஐயின் தீபாவளி அறிவிப்பாக கூட வாடிக்கையாளர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.
அடிக்கடி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் எஸ்பிஐ வங்கி தான் இந்த புதிய அறிவிப்பு மூலம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. முன்பு எஸ்பிஐ ஏடிஎம்மில் அதிகப்பட்சமாக நாள் ஒன்றுக்கு 3முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். அதே போல் 20 ஆயிரம் வரை மட்டுமே ஒரு ஏடிஎம் கார்டில் இருந்து எடுக்க முடியும். மற்ற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தினால் அதற்கு தனி சார்ஜ். மாதத்த்திற்கு 3 முறை இலவச பணப்பரிவர்த்தனை தீர்ந்த பின்பு அதற்கு தனி கட்டணம் என ஏகப்பட்ட விதிமுறைகள் இருந்தன. ஆனால் இப்போது இவை எல்லாமே தலை கீழாக மாறி விட்டது.
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு முக்கிய சலுகைகளை எஸ்பிஐ வங்கி அளித்துள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40 முறை ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்.
கட்டணம் இல்லாத ஏ.டி.எம். சேவைக்கும் ஒரு வாய்ப்பு, மிஸ் பண்ணாதீங்க!
1 லட்சம் அல்லது அதற்கு மேலே மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் அன்லிமிடெட்டாக ஏடிஎம் சேவையை பெறலாம் என்று எஸ்பிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், 25 ஆயிரம் ரூபாய் குறைவாக மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை பணம் எடுக்க முடியும்.