state bank of india atm charges: பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ வங்கி அடிக்கடி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் பழக்கம் உடையது. இந்த வங்கியின் திடீர் திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அடிக்கடி குழம்புவது உண்டு.
பெர்சனல் லோன் தொடங்கி மினிமம் பேலன்ஸ், ஹோம் லோனில் மாற்றம் என எஸ்பிஐ தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வங்கியிடம் இருந்து வந்திருக்கும் அடுத்த அறிவிப்பு தான் இந்த ஏடிஎம் கட்டண சேவை.
எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் 25,000 ரூபாய் இருப்பு தொகையாக வைத்திருப்பவர்கள் மாதத்தில் 5 பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம். வங்கி கிளையை தவிர, மற்ற கிளைகளில் செய்யப்படும் டெபாசிட் செய்யப்படுவதற்கான அதிகபட்ச வரம்பு 2 லட்சம் ரூபாய்.
சேமிப்பு கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு, முதல் மூன்று பரிமாற்றங்களுக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை . 50,000 – 1,00,000 லட்சம் வரை இருப்பு தொகையாக வைத்துள்ளவர்கள் 15 முறை கட்டமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
ஏடிஎம் கார்டுலெஸ் பரிமாற்றத்துக்கு சேவைக்கட்டணம் ரூ.22 + ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத சராசரி இருப்புத்தொகை 50,000 ரூபாயைவிடக் குறைவாக இருப்பவர்கள், இலவச அனுமதிக்குமேல் ஏடிஎம்-களைப் பயன்படுத்தினால் ரூ.5 + ஜிஎஸ்டி. முதல் ரூ.20 + ஜிஎஸ்டி வரை அபராதமாக வசூலிக்கப்படும். மாத சராசரி இருப்புத்தொகை 50,000 ரூபாய்க்குமேல் இருப்பவர்கள், இலவச அனுமதிக்குமேல் ஏடிஎம் -களைப் பயன்படுத்தினால், ரூ.50 + ஜிஎஸ்டி அபராதமாக வசூலிக்கப்படும்.
மீண்டும் குறைந்த ரெப்போ வட்டி! வீட்டு கடன் வாங்க இதுவே சரியான நேரம்
மாதம் சராசரி இருப்புத்தொகை 25,000 ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, முற்றிலும் இலவசமாக எஸ்.பி.ஐ ஏடிஎம்மைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மாத சராசரி இருப்புத்தொகை 50,000 ரூபாய்க்குமேல் 1 லட்சம்வரை இருப்பவர்களுக்கு, 15 இலவச ஏடிஎம் பரிமாற்றம் அனுமதிக்கப்படும்.
அதற்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு, சேவைக்கட்டணமாக 50 ரூபாய் + ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மாத சராசரி இருப்புத்தொகை உள்ளவர்களுக்கு, முழுமையாக இலவச பரிவர்த்தனை அனுமதிக்கப்படும்.