state bank of india atm sbi atm : லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள எஸ்பிஐ வங்கியின் தொடர் அறிவிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த அறிவிப்பு புதுபிக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மெயில் ஐடியை வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குடன் இணைக்க வேண்டும் என்பது தான்.
Advertisment
இந்த இணைப்பானது உங்களது வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை எப்படி நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொள்வதற்கு பெருமளவில் கைக்கொடுக்கும். அதே போல், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பற்றி வாடிக்கையாளர்கள் தெரிந்துக் கொள்ளவும் உதவும்.
state bank of india atm sbi atm : பணம் எடுப்பது எப்படி?
வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் பட்சத்தில், வங்கியில் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும். ஓடிபி எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
Advertisment
Advertisements
இந்த ஓடிபி திட்டமானது எஸ்பிஐயின் அனைத்து ஏடிஎம்களிலும் செயல்பாட்டில் இருக்குகிறது. இந்த நடைமுறையானது அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளில் இருந்து உங்களைப் பாதுக்காக்க உதவுகிறது. இந்த ஓடிபி முறையிலான பணம் பெறும் வசதியானது 10,000 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் போது பொருந்தும்.
எஸ்பிஐ வங்கியின் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள், மற்ற வங்கியின் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தால் இந்த ஓடிபி பணப் பரிவர்த்தனை வசதியைச் செயல்படுத்த முடியாது. ஓடிபி மொபைல் எண்ணுக்கு சென்றால் தான் உங்களால் ஏடிஎம்-களில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை 10,000 ரூ. மேல் பணம் எடுக்க முடியும்
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் நீங்கள் பெற விரும்பும் தொகையை பதிவு செய்த பின், ஏடிஎம் திரையில் ஓடிபி என்ற ஆப்ஷன் கேட்கும் போது, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இதை பதிவிட்ட பின்னரே உங்களது பரிவர்த்தனை முடிவடையும். இந்த முறையானது சற்றே வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.