Advertisment

இக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு - மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்

SBI Loans Repo Rate cut: மார்ச் 28, 2020 முதல் எஸ்பிஐ தனது நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களையும் மாற்றியமைத்துள்ளது புதிய எஸ்பிஐ நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் on retail time deposits 50 bps லிருந்து 20 bps ஆக குறைக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI Home Loans Repo Rate cut

SBI Home Loans Repo Rate cut

SBI Repo Rate Home Loan: ரெப்போ வட்டி விகிதம் குறைப்பின் (repo rate cut) காரணமாக எஸ்பிஐ வீட்டு கடன் வாங்கியவர்கள் முழு நன்மையையும் பெறுவார்கள். நிரந்தர வைப்புக்கான விகிதங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Advertisment

மத்திய ரிசர்வு வங்கி (Reserve Bank of India) ரெப்போ வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் என குறைத்து வங்கி அமைப்பில் உபரி பணப்புழக்கத்தை நீட்டிக்க வேறு பல நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக கடன் விகிதங்களைக் குறைப்பதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு... ஐசிஐசிஐ வங்கியின் அவசர அறிவிப்பு!

எஸ்பிஐ யிடம் கடன்வாங்கும் External Benchmark linked lending rate (EBR) மற்றும் Repo Linked Lending rate (RLLR) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட கடன் தாரர்களுக்கு எஸ்பிஐ ரெப்போவின் 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகித குறைப்பை முழுமையாக அப்படியே கடத்தியுள்ளது.

ஏப்ரல் 1, 2020 முதல் அமலுக்கு வரும் இந்த திருத்தங்களுக்கு பிறகு எஸ்பிஐ யின் EBR மற்றும் RLLR 75 bps என்ற அளவில் குறையும். EBR ஆண்டுக்கு 7.80 சதவிகிதம் என்பதிலிருந்து 7.05 சதவிகிதமாக குறைக்கப்படும் அதேபோல் RLLR ஆண்டுக்கு 7.40 சதவிகிதம் என்பதிலிருந்து 6.65 சதவிகிதமாக குறைக்கப்படும்.

SBI News in Tamil: கொரோனாவால் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு

வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைக்கப்படுவது கடன் வாங்குபவர்களுக்கு பயன் தரும், ஏனெனில் EBR/RLLR இணைக்கப்பட்ட தகுதியான வீட்டுக் கடன் கணக்குகளின் ஈஎம்ஐ’கள் 30 வருட கடனில் ரூபாய் ஒரு லட்சத்துக்கு ரூபாய் 52/- மலிவாக கிடைக்கும்.

அக்டோபர் 1, 2019 முதல் கடன்களின் வட்டி விகிதம் ஒரு External Benchmark உடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கடன்கள் பெரும்பாலும் repo linked lending rate (RLLR) என்று அழைக்கப்படும். எஸ்பிஐ உட்பட பெரும்பாலான வங்கிகளுக்கு இது ரிசர்வு வங்கியின் ரெப்போ விகிதத்தை அடிப்படையாக கொண்டது மற்றும் இது External Benchmark Based Rate (EBR) என்று அழைக்கப்படுகிறது. கடன் வாங்குபவருக்கான பயனுள்ள வட்டி விகிதம் கடன்வாங்குபவரின் வேலை, பாலினம், கடன் தொகை மற்றும் down payment ஆகியவற்றை பொருத்தே இருக்கும்.

மினிமம் பேலன்ஸ் வேண்டாம்! ஸ்வீட் ஷாக் கொடுத்த எஸ்பிஐ

ஏப்ரல் 1, 2016 அன்று அல்லது அதற்கு பிறகு வாங்கப்பட்ட கடன்களுக்கு வட்டி விகிதம் வங்கியின் உள் அளவுகோலான MCLR இணைக்கப்பட்டு இருக்கும். கடன் வாங்குபவருக்கான பயனுள்ள வட்டி விகிதம் கடன்வாங்குபவரின் வேலை, பாலினம், கடன் தொகை, down payment மற்றும் mark-up on the loan ஆகியவற்றை பொருத்து இருக்கும். MCLR கடனை EBR கடனாக மாற்ற விரும்புகிறவர்கள் வங்கியை தொடர்புகொண்டு அவற்றை மாற்றிக் கொள்ளலாம்.

மார்ச் 28, 2020 முதல் எஸ்பிஐ தனது நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களையும் மாற்றியமைத்துள்ளது புதிய எஸ்பிஐ நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் on retail time deposits 50 bps லிருந்து 20 bps ஆக குறைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment