State Bank Of India Twitter Post : இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்கள் எப்போது செய்யக்கூடாத ஒரு விஷயத்தைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறி அந்த விஷயங்கயை செய்தால், அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய முக்கியமான விவரங்களை சேகரிக்க இணையதள மோசடி ஆசாமிகளால் அனுப்பப்படும் மோசடி செய்திகள் (மெசேஜ்) குறித்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரித்துள்ளது.
அரசு நடத்தும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களை விழிப்புடன் இருக்கவும், அவர்கள் மோசடி ஆசாமிகளின் வலையில் விழாமல் இருக்கவும் பல கட்டங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் (OTheOfficialSBI) வாடிக்கையாளர்கள் எச்சரிகையாக இருக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ட்வீட் செய்துள்ளது. “சைபர் குற்றவாளிகள் எஸ்பிஐ என்ற பெயரில் போலி இணைப்புகளை தொடங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதனை வங்கி வாடிக்கையாளர்கள் கிளிக் செய்வதன் மூலம் பலவித சலுகைகள் மற்றும் கிரிடீட் புள்ளிகளை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்படுவதாக சில ஊடகங்களில் பல அறிக்கைகள் வெளிவந்துள்ளது.
இந்த போலி இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் வாடிக்கையாளரின் முக்கிய தகவல்கள் மோசடி ஆசாமிகளிடம் தானாக சென்றுவிடம் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது என்று எஸ்பிஐ ட்வீட் தெரிவித்துள்ளது . இதனால் வாடிக்கையாளர்கள் கார்டு / பின் / ஓடிபி / சிவிவி / கடவுச்சொல் (பாஸ்வேர்டு)போன்ற முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று எங்கள் நாங்கள் அறிவுறுத்துகிறோம். தயவுசெய்து எந்த மின்னஞ்சல் / எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது தெரியாத நபர்களிடம் இருந்து வரும் திறந்த இணைப்புகள் / மின்னஞ்சல்கள் மூலமாகவோ பெறப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் எஸ்பிஐ ஒருபோதும் தொலைபேசி, எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் எஸ்பிஐ உங்கள் முக்கியமான விவரங்களை கேட்காது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம், ”என்று எஸ்பிஐ ட்வீட் மேலும் கூறியுள்ளது. தொடர்ந்து எஸ்பிஐ அனுப்பிய மற்றொரு எச்சரிக்கை உங்கள் ரகசிய எண்களின் முக்கிய தன்மை மற்றும், டிஜிட்டல் வங்கி முறைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று எஸ்.பி.ஐ கேட்டுக் கொண்டது.
இதுபோன்ற செய்திகள், மோசடிகள் அல்லது ஆன்லைன் தாக்குதல்கள் குறித்து எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஃபிஷிங் தாக்குதல்கள் குறித்து சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது. ஃபிஷிங் என்பது ஒரு மோசடி முயற்சி, இது பொதுவாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களைத் தேடும் மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்றவற்றின் மூலம் செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட தகவல்கள், கடவுச்சொல் அல்லது ஒரு முறை எஸ்எம்எஸ் (ஓடிபி) கடவுச்சொல்லைப் பெற ஸ்டேட் வங்கி அல்லது அதன் பிரதிநிதிகள் யாரும் உங்களுக்கு மின்னஞ்சல் / எஸ்எம்எஸ் அல்லது தொலைபேசியில் அழைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ: ஃபிஷிங் தாக்குதலை எவ்வாறு நிறுத்துவது குறித்து பயனுள்ள தகவல்கள் :
உங்கள் உலாவி (Browser) முகவரி பட்டியில் உள்ள URL “https” உடன் தொடங்குகிறது என்பதை உறுதிப்படுத்தவும்.
முகவரி அல்லது நிலைப் பட்டி பேட்லாக் (padlock symbol) சின்னத்தைக் காட்டுகிறது. பாதுகாப்பு சான்றிதழைக் காண மற்றும் சரிபார்க்க பேட்லாக் கிளிக் செய்க.
விரிவாக்கப்பட்ட சரிபார்ப்பு தரத்தை பூர்த்தி செய்யும் ஒரு SSL சான்றிதழுடன் தளம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் முகவரிப் பட்டை பச்சை நிறமாக மாறும்.