state bank of india fixed deposit interest : எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கும் வட்டி திட்டம் குறித்த விளக்கம் இதோ உங்களுக்காக.
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ கடந்த சில மாதங்களாக புதிய அறிவிப்பால் வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் தீபாவளி அறிவிப்பாக, 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து, தற்போது, பிக்சட் டெபாசிட் திட்டத்தின்வட்டி விகிதம் உயர்த்தி இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது இணையதளத்தில் தெரிவித்துள்ள விளக்கம் இதுதான்.
எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.05 முதல் 0.10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. 1 கோடிக்கும் கீழ் எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிடதிட்டத்தில் இணைந்தவர்களுக்கு மாற்றப்பட்ட வட்டி விகிதம் விவரம் இதோ..
7 நாட்கள் - 45 நாட்கள் = 5.75%
46 நாட்கள் - 179 நாட்கள் = 6.25%
180 நாட்கள் - 210 நாட்கள் =6.35%
211 நாட்கள் - 1 வருடம் = 6.4
1 வருடம் - 2 வருடம் = 6.8%
2 வருடம் - 3 வருடம் = 6.8%
3 வருடம் - 5 வருடம் = 6.8%
5 வருடம் - 10 வருடம் = 6.85%
இந்த வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்வு, மக்களுக்குக் கூடுதலான வட்டி வருமானம் கிடைக்க வழி செய்யும். எஸ்பிஐ- யின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பிற வங்கிகளுக்கு வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோன் கேட்டு அலைய வேண்டாம்...வீடு தேடி வந்து லோன் தரும் வசதி இந்தியன் வங்கியில்!