state bank of india fixed deposit interest: எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக 211 முதல் 365 நாட்களுக்குள் முதலீடு செய்யும் போது 6.4 சதவீத வட்டி விகிதம் லாபம் கிடைக்கும்.
46 முதல் 179 நாட்கள் முதலீடு செய்யும் போது 6.25 சதவீத வட்டி விகிதமும், 180 முதல் 210 நாட்கள் முதலீடு செய்யும் போது 6.35 சதவீத வட்டி விகிதமும், 7 முதல் 45 நாட்கள் முதலீடு செய்யும் போது 5.75 சதவீத வட்டி விகித லாபமும் கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 0.5 சதவீதமும், எஸ்பிஐ வங்கி ஊழியர் என்றால் 1 சதவீதம் கூடுதலாகவும் வட்டி விகித லாபம் கிடைக்கும்.
வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எஸ்பிஐ!
எச்டிஎப்சி:
இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த வங்கி நிறுவனமான எச்டிஎப்சி வங்கியில் 5 கோடி ரூபாய்க்கும் குறைவாக 2 முதல் 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் போது 7.4 சதவீத வட்டி விகித லாபம் பெறலாம். மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.5 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும்.
ஐசிஐசிஐ:
ஐசிஐசிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 290 முதல் 1 வருடம் வரை முதலீடு செய்யும் போது 6.75 சதவீத வட்டி விகித லாபமும், மூன்று வருடம் வரை முதலீடு செய்யும் போது 7.5 சதவீத வட்டி விகிதமும் லாபம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக 0.55 சதவீத வட்டி விகித லாபம் பெறலாம்.
ஆக்சிஸ் வங்கி:
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 9 முதல் 364 நாட்களுக்கு முதலீடு செய்யும் போது 7.1 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 7.35 சதவீத வட்டி விகித லாபம் பெறலாம். அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி விகிதம் வரை ஆக்சிஸ் வங்கியின் Fixed Deposit திட்டங்களில் லாபம் கிடைக்கும்.