state bank of india home loan : எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்கள் இந்த தகவலை கேட்டு நிச்சயம் சந்தோஷத்தில் பறக்கலாம்.
எஸ்பிஐ வங்கி கடன் திட்டங்கள் மீதான MCLR வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் MCLR வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்த நிலையில் அதை 8.50 சதவீதமாகக் குறைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்து அறிவித்ததை அடுத்து எஸ்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
MCLR வட்டி விகித குறைப்பு மட்டுமில்லாமல் எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதம் 8.60 முதல் 8.90 சதவீதமாக இருக்கும். தற்போது இது 8.70 முதல் 9.00 சதவீதமாக உள்ளது.
2019 மே 1-ம் தேதி முதல் எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் உள்ள 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்புத் தொகை வைத்திருந்தால் வட்டி விகிதம் 3.50 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகக் குறையும் திட்டமும் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்க பேங்கில் லோன் கேட்டு அலைகிறீர்களா? இதோ உங்களுக்கான வழி!
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்துடன் சேமிப்பு கணக்குகளையும் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்ததினால் இந்த வட்டி விகித குறைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைவதும், அதிகரிக்கும் போது வட்டி விகிதம் உயர்வதும் இயல்பானது.