state bank of india home loan : நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தை 8.60 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவீதமாகஅதிரடியாகக் குறைத்துள்ளது. இந்த வட்டிவிகிதம் வீட்டுக்கடன் துறையில் மிகவும் குறைந்த ஒன்றாகும்.
இந்த வட்டி விகிதம் 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்குப் பொருந்தும். இந்த வசதி கட்டுப்படியாகக்கூடிய வீடு கட்டும் அல்லது வீடு வாங்குபவர்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும். லட்சக்கணக்கான வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை அமைக்க உதவும் என்று எஸ்பிஐ எதிர்பார்க்கிறது. ஆனால், இந்த வட்டிவிகிதம் ஏற்கெனவே இருக்கும் வீட்டை புனரமைக்க கடன் வழங்கப்படாது.
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி பூஜ்ஜியம் புள்ளி 25 சதவீதம் குறைத்துள்ள நிலையில் ஸ்டேட் பேங்க், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டம் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கும் வரும் என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி தற்போது உள்ள ரெபோ வட்டி விகிதத்தை நிர்ணயித்தது. தற்போதைய ரெபோ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக இருக்கிறது. ஸ்டேட் வங்கியின் வீட்டுக் கடன் திட்டம் மீதான குறைந்தபட்ச வட்டி விகிதம் 8.55 சதவீதம் ஆகும்.
இந்நிலையில், ஜூலை 1ஆம் தேதி (இன்று) முதல் ரெபோ வட்டியுடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், ஸ்டேட் வங்கியின் வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றால், அதன் மீதான வட்டி 8.35 சதவீதமாகக் குறைகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இணையப்போகிறீர்களா?
இந்த விதமாக, ரெபோ வட்டி விகிதம் உயரும் பட்சத்தில் வீட்டுக் கடன் திட்டத்தின் தவணைத் தொகையும் அதிகரிக்கும். இதற்கு ஆயத்தமாக குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளை ஸ்டேட் வங்கி ஏற்கெனவே ரெபோ வட்டி விகிதத்துடன் சேர்த்துவிட்டது.
ஏப்ரல் 1ஆம் தேதி ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் பேலன்ஸ் வைத்திருந்த வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் ரெபோ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன.