state bank of india home loans : அனைவருக்கும் சொந்த வீட்டில் வசிக்கவேண்டும் என்ற கனவு இயல்பாகவே இருக்கும். காரணம், நம் பெயரில் சொந்த வீடு இருந்தால் உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்யும் இடங்களில் கூட நம்மை பொருளாதார ரீதியாக பார்க்கின்ற பார்வையே வேறு.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் பெண்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் பயனடையலாம். வீட்டினைப் புதுப்பிக்கவும் இதன் மூலம் கடன் பெற முடியும்.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் நகரம் மற்றும் சிறு நகரங்கள் என்ற வகையில் 721 பகுதிகளில் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும்போது 1 லட்சம் ரூபாயில் இருந்து 2.30 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஊரக வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றில் வீட்டுக் கடன் வாங்கினால் இந்த மானியம் கிடைக்கும்.
ஏற்கெனவே சொந்த வீடு உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் பயனடைய முடியாது. முதல் வீடு வாங்குபவராக அல்லது முதல் வீடு கட்டுபவராக அல்லது ஏற்கெனவே உள்ள வீட்டினை இயற்கை பாதிக்காத வண்ணம் அனைத்து வசதிகளையும் கொண்ட வகையில் மாற்றி அமைப்பவராக இருக்கவேண்டும்.
சொந்த இடம் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 சதுர மீட்டர் (323 சதுர அடி) அளவுள்ள இடமாக இருக்க வேண்டும். கட்டும் வீடு, அறை, சமையல் அறை மற்றும் கழிப்பிட வசதி என அனைத்து வசதியினையும் உள்ளடக்கிய வகையில் இருக்கவேண்டும்.
கணவன், மனைவி மற்றும் திருமணம் ஆகாத பிள்ளைகள் அடங்கிய குடும்பமாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினராக இருந்தால் குடும்ப ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாயாகவும், குறைந்த வருமானம் உள்ள பிரிவினராக இருந்தால், குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய் வரையும் இருக்கலாம்.
இந்தத் திட்டத்தில் பயனடைய சொந்த வீடு இல்லை என்பதற்கான சான்றிதழும், வருமானச் சான்றிதழும் இணைக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் 2022–ம் ஆண்டுக்குள் ஐந்து கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் வீடு கட்டவேண்டும். வங்கிக் கடன் பெற நினைப்பவர்கள், 70 வயதுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் வயது வரம்பு நிர்ணயக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் நமக்கு முதலில் வைக்கும் ஆப்பு மினிமம் பேலன்ஸ் தான்! தப்பிப்பது எப்படி?
இந்தத் திட்டத்தின் கீழ் அதிகப்பட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் பெறலாம். எவ்வளவு கடன் பெறுகிறார் என்பதைப் பொறுத்தே மானியம் கிடைக்கும். அதிகபட்சமாக 2.30 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.
இது வீட்டுக் கடன் வாங்குவது போல தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.