state bank of india housing loan interest : வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது கூறுங்கள். சொந்த வீட்டில் அமர வேண்டும் என்பது தான் இன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் மிகப் பெரிய ஆசை.
இதற்கு சமீப காலமாக பெருமளவில் கைக்கொடுக்கிறது எஸ்பிஐ வங்கி. மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டு கடன் திட்டத்தில் அளிக்கும் சலுகைகளும், திட்டங்களும் பெருமளவில் உதவுகின்றன.
இந்நிலையில், ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கும் வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப் போகிறதாம் எஸ்பிஐ. எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி பாருங்கள். ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் வட்டி விகித அடிப்படையில் ஏற்கனவே எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க ஆலோசனைகள் நடந்து வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்து 5.4 சதவிகிதமாக குறைத்தது. இதனால் வங்கிகளுக்கு கொடுக்கப்படும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், எஸ்.பி.ஐ அதை உடனடியாக குறைத்துள்ளது.
எஸ்.பி.ஐ தனது கடன்களுக்கான வட்டிவிகிதத்தை 8.40 சதவிகிதத்தில் இருந்து, 8.25 சதவிகிதமாக குறைத்தது. மேலும் இந்த வட்டி குறைப்பு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் அமலுக்கும் வந்தது. இந்நிலையில், மறுபடியும் எஸ்பிஐ வங்கி வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் இருவருக்கும் குறைக்க திட்டமிட்டுள்ளது.
எஸ்பிஐ - யில் ஜீரோ பேலன்சில் வாழ்நாள் சேமிப்பு கணக்கு!
0.30% முதல் 0.70% வரை வட்டி குறையும? என்ற எதிர்ப்பார்ப்பு மோலூங்கியுள்ளது. தற்போது ஆர்பிஐ ரெப்போ ரேட் வட்டி விகிதம் 5.40 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 2.25 சதவிகிதம் கூடுதல் வட்டி கணக்கிட்டால் 7.65 சதவிகிதம். இது தான் ரெப்போ வட்டி விகித அடிப்படையில் வரும் வட்டி. இதன் மீது 0.40% முதல் 0.55 சதவிகிதம் வரை கூடுதல் வட்டியை வைத்துக் கணக்கிட்டால் 8.05 முதல் 8.20 சதவிகிதம் வரை வட்டி வருகிறது.