வாடிக்கையாளர்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா? எஸ்பிஐ -யின் புதிய அறிவிப்பு தெரியுமா?

பரிவர்த்தனைக்கான கட்டணம், 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

state bank of india sbi
sbi bank tamil news, icici bank, hdfc bank news, axis bank tamil news, வங்கி செய்தி, பாரத ஸ்டேட் வங்கி

state bank of india internetbanking : ஏ.டி.எம்., இயந்திரத்தில் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இது தெரியாமல் பலரும் கூறும் குற்றச்சாட்டு வைப்பது என்னவெனில், ‘பணமே எடுக்கவில்லை; எனது கணக்கில் பணமே இல்லை, ஆனால் சேவை கட்டணம் பிடிக்கப்பட்டுள்ளது’ என்பதே.

ATMகளில் இந்த முறையிலும் பணம் எடுக்கலாம் – SBI, ICICI வங்கிகள் புதுமை

பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. சமீபகாலமாக எஸ்பிஐ தொடர் அறிவிப்புகள் வாடிக்கையளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்தன.

SBI Jobs: எஸ்பிஐ-ல அக்கவுண்ட்டும் இருக்கு, வேலையும் இருக்கு – எஸ்பிஐ வங்கியின் மெகா அறிவிப்பு

இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி ஷாக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், பெருநகரங்களில், ஐந்து முறை, எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மூன்று முறை பிற வங்கிகளிலும், இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இது, பெரு நகரம் அல்லாத பகுதிகளில், 10 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலவச பரிவர்த்தனைகளை கடந்த சேவைகளுக்கு, 5 முதல், 20 ரூபாய் உடன், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். ஏ.டி.எம்., இயந்திரத்தில், வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, 20 ரூபாய் சேவை கட்டணம் பிடிக்கப்படும். கார்டு இல்லா பரிவர்த்தனைக்கான கட்டணம், 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மறந்து விடாதீர்கள்! இந்த மாதம் முதல் ஐசிஐசிஐ வங்கியில் எல்லாம் திட்டங்களும் மாற்றப்பட்டுவிட்டது

மாத சராசரி வைப்புத் தொகையாக, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பராமரித்தால், எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்.,களில் கணக்கில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த புதிய கட்டண முறை, அக்டோபர் மாதம் முதலே அமலுக்கு வந்தது.

ஆனால் இதுக் குறித்த முழு விபரங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக தெரியாததால் பலரும் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமில்லை கட்டணம் பிடிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேரில் சென்று இதுக் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: State bank of india internetbanking state bank of india internet banking sbi internet banking sbi

Next Story
ஜியோ வழங்கும் ‘ஆல் இன் ஒன்’ திட்டங்கள் – இவ்வளவு கம்மியாவா!!!jio phone all in one monthly plans tariff details - ஜியோ வழங்கும் 'ஆல் இன் ஒன்' திட்டங்கள் - இவ்வளவு கம்மியாவா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com