SBI Amrit Vrishti | டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 444 நாட்கள் வைப்புத்தொகைக்கு 7.25 சதவீத வட்டி வழங்கும் சிறப்பு வைப்புத் திட்டமான “அம்ரித் விருஷ்டி”-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு கூடுதல் 0.50 சதவீத வட்டி விகிதமும் கிடைக்கிறது. முன்னதாக, பேங்க் ஆஃப் பரோடா (BoB) மற்றும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆகியவையும் சிறப்பு வைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
மற்ற வங்கிகளின் 2 சிறப்பு திட்டங்கள்
பேங்க் ஆஃப் பரோடா இன் சிறப்புத் திட்டம், “BoB Monsoon Dhamaka Deposit Scheme” எனப் பெயரிடப்பட்டுள்ளது, இது 399 நாட்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதங்களையும், ரூ. 3 கோடிக்குக் குறைவான டெபாசிட்டுகளுக்கு 333 நாட்களுக்கு ஆண்டுக்கு 7.15 சதவீதத்தையும் வழங்குகிறது.
இதற்கிடையில், பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் சிறப்புத் திட்டத்தில் 10 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்ய நான்கு தேர்வுகள் உள்ளன.
இது 200 நாட்களுக்கு 6.90 சதவிகிதம், 400 நாட்களுக்கு 7.10 சதவிகிதம், 666 நாட்களுக்கு 7.15 சதவிகிதம் மற்றும் 777 நாட்களுக்கு 7.25 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது.
எஸ்.பி.ஐ தலைவர் பேட்டி
இது குறித்து எஸ்.பி.ஐ தலைவர் தினேஷ் காரா, “எஸ்பிஐயின் அம்ரித் விருஷ்டி சிறப்பு வைப்புத் திட்டம் மார்ச் 31, 2025 வரை முதலீட்டுக்குக் கிடைக்கும். பல்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட கால வைப்புத் திட்டத்தின் புதிய மாறுபாடாகும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“