state bank of india minimum balance account : இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்காக நடைமுறையில் வைத்திருக்கும் சலுகைகள் ஏராளம். அதே போல் எஸ்பிஐ வங்கியில் மக்களுக்காகவே எத்தனையோ புதிய புதிய திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு டிஜிட்டல் முறையில் அதாவது ஐஎம்பிஎஸ் -இல் பணப்பரிமாற்றம் செய்யும் போது வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கட்டண ரத்தானது ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ செயலி, இன்டர்நெட் பேங்கிங்,மொபைல் பேங்கிங் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்யும் போது இந்த கட்டண ரத்து நடைமுறைக்கு வரும்.
முன்னதாக என்இஎஃப்டி,ஆர்டிஜிஎஸ் முறையில் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்களை ஜூலை மாதம் 1 ஆம் தேதியோடு ரத்து செய்தது. மேலும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து விதமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டது.
சேமிப்பு கணக்குகளுக்காக அட்டகாசமான திட்டங்களை அறிமுகப்படுத்தும் எஸ்பிஐ!
என்இஎப்டி சேவை மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிலும், ஆர்டிஜிஎஸ் வழியாகச் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 முதல் ரூ.50 வரையிலும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இந்த கட்டணம் வசூலிக்கப்படாது.
வாடிக்கையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) உடனடி கட்டண சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் (RTGS) ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை ரத்து செய்தது.