பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பு.. இனிமேல் மினிம பேலன்ஸ் குறித்த கவலை வேண்டாம்!

மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகையை 75 சதவீதம் குறைத்துள்ளது.

மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகையை 75 சதவீதம் குறைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
icici netbanking online login

icici netbanking online login

state bank of india minimum balance charge : எந்த வங்கியில் வைத்திருந்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பெரிய கவலை மினிமம் பேலன்ஸ் பற்றிதான்.

Advertisment

வங்கி குறிப்பிடும் தொகையை வாடிக்கையாளர்கள் மினிமல் பேலன்ஸாக தம் கணக்கில் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் வங்கி விதித்துள்ள கட்டணத்தொகையை செலுத்த வேண்டும்.

ஆக்சிஸ் வங்கி:

ஒரு வாடிக்கையாளர் குறைந்தது 10,000 ரூ மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும் என்பது விதி. அப்படி இல்லையென்றால் ரூ. 100 முதல் 500 வரை அபராதம் வசூலிக்கப்படும். இந்த தொகையுடன் ஜிஎஸ்டி -யும் அடக்கம்.

அதே போல் பஞ்சாப் நேஷனல் வங்கியில், நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியில் குறைந்தது 2,000ரூ வரை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். கிராம வாடிக்கையாளர்கள் 1000 ரூ வரையில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். இதை பின்பற்றவில்லையென்றாளால் ரூ. 25 முதல் 250 வரை அபராதத் தொகை விதிக்கப்படும்.

Advertisment
Advertisements

வேகமாக பணத்தை இரட்டிபாக்கும் பிக்சட் டெபாசிட் திட்டம்.. எந்த வங்கியில் வட்டி அதிகம் தெரியுமா?

நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் எவ்வளவு அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஆக்ஸிஸ், எஸ்பிஐ போன்ற வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் உங்களிடம் வசூலிக்கும் தொகையை கட்டாயம் தெரிந்து வைத்திருங்கள்.

எஸ்பிஐ:

ஆனால் எஸ்பிஐ வங்கி,மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகையை 75 சதவீதம் குறைத்துள்ளது. அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டும் நிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஜிஎஸ்டி வரி உண்டு.

மேலும் இந்த வங்கி 3 ஜீரோ பேலன்ஸ் திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்களில் மற்ற சேமிப்பு கணக்குக்களுக்கான அதே வட்டி விகிதம் அளிக்கப்படுவது கூடுதல் தகவல்.

Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: