state bank of india minimum balance: வாடிக்கையாளர்கள் சில வங்கி விதிமுறைகளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவை என்னென்ன என்று பார்ப்போம். இந்த விதிமுறைகளை நீங்களே முன்பு தெரிந்துக் கொண்டால் வங்கிகள் உங்களை எந்த ஒரு நேரத்திலும் ஏமாற்ற முடியாது.
1. ஆர்.டி.ஜி.எஸ்.:
நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு அல்லது ஆர்.டி.ஜி.எஸ் வங்கிகளுக்கிடையிலான அல்லது ஒரு வங்கியின் கிளைகளுக்கிடையிலான பணப் பரிவர்த்தனைகள் செய்யும் வசதியைத் தருகிறது. என்.இ.எஃப்.டி. போல இல்லாமல் இது பரிவர்த்தனைகள் நிகழ் நேரத்தில் வெகு விரைவாக நடப்பதை உறுதி செய்கிறது. இதற்காக ஒரு நியாயமான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
2. செயலற்ற கணக்குகள்:
ஒரு வாடிக்கையாளர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தனது வங்கிக் கணக்கில் வங்கியின் வட்டி வரவினங்களைத் தவிர வேறு பரிவர்த்தனைகள் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் அந்த சேமிப்புக்கணக்கு அல்லது நடப்புக் கணக்கு செயலற்ற கணக்காக அறிவிக்கப்படுகிறது.
கட்டணங்கள் குறித்த பயம் இனி வேண்டாம். எஸ்பிஐ கொடுத்த இன்ப அதிர்ச்சி.
3. நோ-பிரில்ஸ் கணக்கு:
அனைத்து வாடிக்கையாளர்களும் வங்கிப் பரிவர்த்தனைகளை எளிமையாக உபயோகிக்கும் பொருட்டு வங்கிகளால் வழங்கப்படும் அடிப்படை வங்கிக் கணக்கு இது. இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு என்று ஏதும் இன்றி அடிப்படை வசதிகளான மின்னணு பணப் பரிமாற்றம், நெட் பேங்கிங், இலவச காசோலை புத்தகம் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
4. செய்முறைக் கட்டணம்:
கடன் வாங்குபவரிடம் இருந்து, கடனை பரிசீலிக்கும் பொருட்டு செய்முறைக் கட்டணம் அல்லது ப்ராசசிங் கட்டணம் ஒன்றை வங்கிகள் வசூலிக்கின்றன. இது உங்கள் மொத்தக் கடன் தொகையில் ஒரு சதவீதமாக (உதாரணத்திற்கு 2.5 %) இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்தக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.