இதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்... SBI வாடிக்கையாளர்களே!

வாடிக்கையாளர்கள், ‘மிஸ்டு கால்’ மூலம் தங்களது இருப்புப் பணத்தை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

State Bank Of India: வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி இருப்பை அறிந்து கொள்ளவும், மினி ஸ்டேட்மெண்ட் பெறவும் ஸ்டேட் வங்கி சில சுலபமான வழிமுறைகளைக் கொடுத்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய பொதுத்துறை வங்கி, இது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஹெல்ப் லைன் உள்ளிட்ட வசதிகளை செய்திருக்கிறது. இன்று ஆன் லைன் பேங்கிங் காரணமாக வங்கி பரிவர்த்தனைகள் மிகவும் இலகுவாகியுள்ளது.

SBI Withdrawal Limit: எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க? – இதை உடனே படிச்சிட்டு ஏடிஎம் போங்க

ஸ்டேட் வங்கியில் உள்ள எளிமையான வசதி வங்கி பணமாற்றங்கள் தற்போது பெருகிவிட்டதால், நமது சேமிப்புப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? என்பதை கண்டறிவது முக்கியம்.

இதற்காக வாடிக்கையாளர்கள் அங்குமிங்கும் அலையாமல் இருக்க, பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ‘மிஸ்டு கால்’ மூலம் தங்களது இருப்புப் பணத்தை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

வங்கியில் பதிவு செய்து வைத்திருக்கும் செல்போன் எண்ணில் இருந்து 09223766666 என்கிற எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் மிஸ்டு கால் கொடுத்தால் போதுமானது. அல்லது, ‘BAL’ என டைப் செய்து எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

SBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை

மேலும் ‘மினி ஸ்டேட்மெண்ட்’ தேவைப்படுவோர் 09223866666 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து அறிந்துகொள்ளலாம். அல்லது, ‘MSTMT’ என டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பித் தெரிந்துகொள்ளலாம்.

இந்த வசதிகளை வாடிக்கையாளர்களுக்காக ஸ்டேட் வங்கி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close