state bank of india netbanking online : பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல விதமான கணக்குகள் தொடங்கும் வாய்ப்பை வழங்குகிறது. சேமிப்புக் கணக்கு நிரந்தர வைப்பு நிதி தொடர் வைப்பு நிதி என அனைவருக்கும் பரீட்சியமான கணக்குகள் தவிர, சேவிங்ஸ் பிளஸ் என்ற கணக்கும் ஸ்டேட் வங்கியில் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.உங்களில் எத்தனை பேருக்கு இந்த தகவல் தெரியும்?
பல முதலீட்டு வாய்ப்புகளை இந்தக் கணக்கில் வழங்குவதால் இது 'Savings Plus Account' என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேரும் பணம் (குறைந்தபட்சம் ரூ.1,000) நிரந்தர வைப்பு நிதி போன்ற பிற முதலீடுகளுக்கு தானாகவே மாற்றப்படும்.
சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் தகுதி உடைய அடைவரும் சேவிங்ஸ் பிளஸ் கணக்கையும் தொடங்க முடியும். பிற முதலீடுகளுக்கு பணத்தை மாற்றுவதற்கு குறைந்தபட்சம் 35,000 ரூபாய்க்கு மேல் கணக்கில் பணம் சேர வேண்டும். ரூ.35,000க்கு அதிகமாக சேரும் பணம் ஆயிரம், ஆயிரம் ரூபாய்களாக மற்ற முதலீட்டுக்கு மாற்றம் செய்யப்படும்.
சாதாரண சேமிப்புக் கணக்கிற்குக் கிடைக்கும் அதே அளவு வட்டியே இந்த சேவிங்ஸ் பிளஸ் கணக்குக்கும் கிடைக்கும். மற்ற முதலீடுகளின் அளவு குறைந்தபட்சம் ரூ.10,000 ஆக இருக்க வேண்டும். இந்தத் தொகை ஆயிரம் ரூபாய்களாக மாற்றப்படும். இதன் முதலீட்டுக் காலம் 1 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.
மெட்ரோ நகரங்களில் சேவிங்ஸ் பிளஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையின் மாத சராசரி ரூ.3000 ஆகும். புறநகர்களில் இந்தக் கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.2000. கிராமப்புறங்களில் இந்தக் கணக்குக்கு ரூ.1000 குறைந்தபட்ச இருப்புத்தொகை கட்டாயம்.
உங்கள் பணத்தை வங்கி 5 நாட்களில் தந்து விடும்.
குறைந்தபட்ச இருப்புத் தொகையின் மாத சராசரி 3000 ரூபாய்க்கு குறைவாகிவிட்டால், அது இந்தக் கணக்குடன் இணைந்துள்ள முதலீட்டுத் திட்டத்திலிருந்து பணம் கழிக்கப்படும். இது முதலீட்டைப் பாதிக்கும். இத்துடன் வங்கிக் கணக்கு வைத்துள்ள இடத்தைப் பொருத்து அபராதமும் வசூலிக்கப்படும்.
இந்தக் கணக்குக்கு ஏடிஎம் கார்டு, மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் போன்ற வசதிகளும் உண்டு. சேவிங்ஸ் பிளஸ் கணக்கின் மூலம் முதலீடு செய்வதை வைத்து வங்கிக் கடனும் பெற முடியும்.