state bank of india netbanking :இன்றைய அவசர உலகில் பலரும் ஆன்லைன் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம். முன்பெல்லாம் பணத்தை அனுப்பவேண்டும் என்றால் நிறைய சிரமங்களை எடுக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்போது கதையே வேற.
மக்கள் அதிகமாக ஆன்லைன் பரிவர்த்தனையை பயன்படுத்துவதை தெரிந்துக் கொண்ட வங்கிகள் அடிக்கடி அபராதம் விதிப்பதை வேலையாக செய்துக் கொண்டிருக்கின்றன.
கூடவே,ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் தோல்வி அடைந்து வாடிக்கையாளருக்கு பண இழப்பு ஏற்பட்டால் அந்த பணத்தை திரும்ப பெற வங்கிகளுக்கு அலைய வேண்டியது இருக்கிறது.
இதற்கு ஒரு முடிவு வந்து விட்டது. ஆம், கடைசி நேரத்தில் தோல்வி அடையும் ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்விகளுக்கு உங்கள் தொகையில் இருந்து எடுக்கப்படும் பணம் மீண்டும் உங்கள் அக்கவுண்டுக்கு 5 நாட்களில் வந்து சேரும். வங்கிகள் அதனை 5 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடுவில் வாடிக்கையாளரின் கணக்கில் கழிப்பட்ட பணம் மீண்டும் வரவு வைக்கப்பட வேண்டும். இல்லையெனில், நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் தினமும் இழப்பீட்டையும் சேர்த்து கொடுக்க வேண்டியிருக்கும் என கெடுபிடியாக விதியை பிறப்பித்துள்ளது.
ஆதார் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள், ஐஎம்பிஎஸ், யுபிஐ முதலிய ஆன்லைன் வழிமுறைகள் என பல்வேறு விதமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
ல்ல செய்தி சொன்ன ஐசிஐசிஐ
வாடிக்கையாளர் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயலும்போது, பணம் கிடைக்காமல் கணக்கிலிருந்து அதே அளவு பணம் கிழக்கப்பட்டால் அது தோல்வி அடைந்த பரிவர்த்தனையாகக் கருதப்படும்.