எஸ்பிஐ வங்கி தனது பாதுகாப்பு பெட்டக வசதிக்கான வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மார்ச் 31 முதல் நீங்கள் எவ்வுளவு கட்டணம் செலுத்தப்போகிறீர்கள் தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி -Sate Bank of India (எஸ்பிஐ) தனது வங்கி பாதுகாப்பு பெட்டக வசதிக்கான வாடகை கட்டணத்தை நாடு முழுவதும் உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை கட்டணம் வரும் மார்ச் 31 முதல் அமலுக்கு வருகிறது. கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு ஒரு வருடத்துக்கான எஸ்பிஐ வங்கி பாதுகாப்பு பெட்டக வசதிக்கான கட்டணம் குறைந்தது ரூபாய் 500 வரை அதிகரிக்க கூடும். எஸ்பிஐ வங்கியின் சிறிய பாதுகாப்பு பெட்டக வசதிக்கான வாடகை கட்டணம் ரூபாய் 500 லிருந்து ரூபாய் 2000 ம் ஆக உயர்த்தப்படுகிறது. அதே போல் மிகப் பெரிய வங்கி பெட்டக வசதிக்கான வருடாந்திர வாடகை கட்டணம் ரூபாய் 9000 லிருந்து இப்போது ரூபாய் 12,000 ஆக உயர்த்தப்படுகிறது.
மேலும் படிக்க : எஸ்பிஐ EMV டெபிட் கார்டை ஆன்லைனில் எப்படி வாங்குவது?
எஸ்பிஐ வங்கியின் நடுத்தர அளவு பாதுகாப்பு பெட்டகத்திற்கான கட்டணம் ரூபாய் 1000 லிருந்து ரூபாய் 4000 ஆக உயர்த்தப்படுகிறது. அதே சமயம் பெரிய வங்கி பெட்டகத்திற்கான வாடகை கட்டணம் ரூபாய் 2000 லிருந்து ரூபாய் 8000 ஆக உயர்த்தப்படுகிறது. ஜிஎஸ்டி நீங்கலாக இந்த உயர்த்தப்பட்ட வாடகை கட்டணங்கள் மெட்ரோ நகரங்கள் மற்றும் நகர்புற பகுதிகளுக்கு மட்டும் தான் பொருந்தும்.
எஸ்பிஐ வங்கி கிளைகள் மலிவான பெட்டக வாடகை சேவைகளை semi-urban மற்றும் கிராமப்புறங்களில் வழங்கி வருகிறது. இந்த பகுதிகளில் வாடகை தொகை ரூபாய் 1,500 ல் துவங்கி ரூபாய் 9,000 வரை உள்ளது. அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளிலும் பாதுகாப்பு பெட்டக வாடகை கட்டண உயர்வு 33 சதவிகிதம் வரை உள்ளது.
மேலும் எஸ்பிஐ சின்ன மற்றும் நடுத்தர பாதுகாப்பு பெட்டகங்களுக்கு, பாதுகாப்பு பெட்டக பதிவு கட்டணமாக ரூபாய் 500 மற்றும் ஜிஎஸ்டி வரி என ஒருமுறை மட்டும் விதிக்கிறது. அதே போல் பெரிய மற்றும் மிகப்பெரிய பாதுகாப்பு பெட்டகங்களுக்கு ரூபாய் 1000 மற்றும் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து பதிவு கட்டணமாக வதிக்கிறது.
பாதுகாப்பு பெட்டகங்களுக்கான வாடகையை சரியான நேரத்தில் கட்ட தாமதமானால் அதற்கான அபராதம் 40 சதவிகிதம் வரை விதிக்கப்படுகிறது.
மத்திய ரிசர்வு வங்கியின் (Reserve Bank of India) விதிமுறைகளின் படி நீங்கள் உங்கள் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தை வருடத்துக்கு ஒருமுறை கூட திறந்து பார்க்காவிட்டால், வங்கிகள் அதை திறந்து பார்க்க அனுமதி உண்டு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.