எஸ்பிஐ வங்கியின் இணைய சேவை மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது அதற்கான கட்டனமாக 1 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் பணம் பெறப்படுகின்றது. அத்தோடு 18 %வயிரையில் வட்டியும் பெறப்படுகின்றது.
இவ்வாறு ஆன்லைன் பேங்கிங் சேவைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய NEFT, IMPS, RTGS சேவைகள் உள்ளன. எனவே இவற்றைப்பயன்படுத்தும் போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு கட்டணம வசூலிக்கப்படுகிறது என்று தெரியுமா?
இந்த வங்கியில் 10,000 ரூபாய் வரை NEFT பரிவர்த்தனை செய்யும்போது 1 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 10,001 முதல் 1 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும்போது 2 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும்போது 3 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 2 லட்சத்திற்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்யும்போது கூடுதலாக 5 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களே உஷார்! 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் ரூ. 50 கட்டணம்.
ஆனால் 1000 ரூபாய் வரை எந்தக் கட்டணமும் இல்லை, IMPS பரிவர்த்தனை செய்யும்போது. மேலும் 1001 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனை செய்ய 15 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக பெறப்படும்.
இந்நிலையில், ரூ 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை RTGS பரிவர்த்தனை செய்யும்போது 5 ரூபாய் +ஜிஎஸ்டியும்; 5 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான பரிவர்த்தனையைச் செய்யும்போது 10 ரூபாய் +ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.