state bank of india online banking charges : இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அண்மையில் அறிவித்த மிகப் பெரிய அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வருகிறது.
என்ன அறிவிப்பு அது?
கடந்த மார்ச் 31 ஆம் தேதி, எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு இதுதான். எஸ்பிஐ ஆன்லைன் பரிவர்த்தணையான தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT), உடனடி கட்டண சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் (RTGS) ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய திட்டமிட்டப்ப்ட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த கட்டண ரத்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.ஐ.யின் டிஜிட்டல் செயலியான யோனோ (YONO) மூலம் வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.
ஆர்டிஜிஎஸ் முறை மூலம் ரூ.2 லட்சத்திற்கு மேல் அதிக அளவு மதிப்புக்கு ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம். என்இஎப்டி முறை என்பது ரூ.2 லட்சம் வரையில் மட்டும் ஆன் லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்.ஜூலை 1ம் தேதிக்கு முன்னர் வரையில் என்இஎப்டி மூலம் பண பரிவர்த்தனைக்கு ₹1 மற்றும் ₹5 கட்டணாக வசூல் செய்தது.
டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து அதிர்ச்சி தந்த எஸ்பிஐ!
அதேபோல், ஆர்டிஜிஎஸ் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு ரூ.5 முதல் 50 வரை கட்டணம் விதித்தது.2019 மார்ச்ச மாதம் வரையில் ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்திய எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமானவர்கள். அதேபோல், 1.41 கோடி பேர் மொபைல் போன் வங்கி சேவையை பயன்படுத்தி உள்ளனர்.