state bank of india online banking charges : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இணையதள வங்கி சேவை மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும்போது 1 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் கட்டணங்களை வசூலிக்கிறது. இந்தக் கட்டணங்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரியாக 18 சதவீதத்தையும் கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
இணையதள வங்கி சேவைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய NEFT, IMPS, RTGS சேவைகள் உள்ளன. எனவே இந்தப் பரிவர்தனை சேவைகளைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று இங்கு பார்ப்போம்.
எஸ்பிஐ-யின் முத்தான 3 திட்டங்கள்.. பயன்பெற போகும் வாடிக்கையாளர்கள்
NEFT :
எஸ்பிஐ வங்கியில் 10,000 ரூபாய் வரை NEFT பரிவர்த்தனை செய்யும்போது 1 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 10,001 முதல் 1 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும்போது 2 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும்போது 3 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 2 லட்சத்திற்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்யும்போது கூடுதலாக 5 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
IMPS :
IMPS பரிவர்த்தனை செய்யும்போது 1000 ரூபாய் வரை எந்தக் கட்டணமும் இல்லை. 1001 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு 5 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனை செய்ய 15 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
RTGS :
ரூ 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை RTGS பரிவர்த்தனை செய்யும்போது 5 ரூபாய் + ஜிஎஸ்டியும்; 5 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான பரிவர்த்தனையைச் செய்யும்போது 10 ரூபாய் + ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.