Advertisment

இனிமேல் ஆன்லைனில் பணம் அனுப்புவது ரொம்ப ரொம்ப ஈஸி!

இந்த வசதியை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi state bank netbanking

sbi state bank netbanking

state bank of india online net banking : சமீபத்தில் ஆன்லைன் பரிவர்த்தனையில் ஆர்டிஜிஎஸ் முறையில் புதிய நேரம் பின்பற்றப்படும் என ஆர்பிஐ அறிவித்திருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்த புதிய மாற்றம் அமலுக்கு வந்தது.

Advertisment

இன்றைய பரபரப்பான உலகில் அனைவரும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறோம். வங்கிளுக்கு நேராக சென்று பணத்தை ஒரு அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு மாற்றப்படுவது எல்லாம் வேலைக்கே ஆகாது என்பது போல் ஆகிவிட்டது. இந்த நேரத்தை குறைப்பதற்காக வங்கிகள் ஆன்லைன் ட்ரான்சேக்‌ஷனை நடைமுறையில் வைத்துள்ளன.

ரொக்கமாக பரிமாற்றுவதற்குப் பதிலாக RTGS, NEFT ஆகிய ஆன்லைன் முறைகளை பயன்படுத்தும் பழக்கத்தில் உள்ளன. இவற்றில் RTGS ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) என்பது 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகைகளின் பரிவர்த்தனைக்குரியது.

இந்த ஆர்.டி.ஜி.எஸ். முறைக்கான நேரத்தை ஆர்பிஐ ஏற்கெனவே மாற்றி இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை இருந்து வந்த ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைக்கான நேரத்தை மாலை 6 மணி வரை நீடித்திருக்கிறது. இது ஜூன் 1ஆம் தேதி முதலே அமலுக்கு, வந்தது.

இந்நிலையில், இந்த வசதியில் மீண்டும் தற்போது நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வசதியை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றுகிறது.ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு இடையேயான பரிவர்த்தனைகள் காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 7.45 மணிக்கு முடியும். இந்த மாத தொடக்கத்தில், டிசம்பர் முதல் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் 24 மணிநேர பணப்பரிமாற்றத்தை அனுமதித்தது.

அவசியமான தகவல்! எஸ்பிஐ ஏடிஎம்-ல் எத்தனை முறை பணம் எடுத்தால் அபராதம் இல்லை தெரியுமா?

லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட NEFT பரிவர்த்தனைகளை தினசரி 24 மணிநேரமும் செய்வதற்கான அனுமதியையும் ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. இது வரும் டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கு கட்டணங்கள் ஏதுமில்லை

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment