state bank of india personal loan: பர்சனல் லோன் மிக எளிதாக முடிந்து விடும் இந்த கடனுக்கு கீழ் எத்தனை விதமான கடன்கள் அடங்கும் தெரியுமா?
பொதுமக்கள் பர்சனல் லோன் வாங்க துணிந்தாலும் எந்த வங்கியில் வாங்க வேண்டும், பர்சனல் லோனுக்கு எது பாதுக்காப்பான வங்கி? வட்டி விகிதம் எங்கு குறைவு என ஏகப்பட்ட கேள்விகள் மனதில் தோன்றுவது வழக்கம். இந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லும் விதமாக இந்த செய்தித்தொகுப்பு உங்களுக்காக தான்.
1. தனி நபர் கடன்: மிகவும் எளிதாக, விரைவாக மற்றும் இன்னல்கள் அற்றனவையாக இருப்பதே இவை பிரபலமாய் இருப்பதற்கான காரணங்களாகும். இதில், செக்யூரிட்டியோ அல்லது வேறு ஏதெனும் சொத்துக்களோ அடமானம் வைக்கத் தேவையில்லை. ஆதலால் இதை ஆன்லைனில் ஒரு பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் கூட வாங்கலாம்.
2. தங்கக் கடன்கள்: முன்னணி வங்கிகளான, ஹெச்டிஎஃப்சி போன்றவை, தங்கக் கடன்களுக்கு சொல்லிக் கொள்ளும்படியான நல்ல வட்டி விகிதங்களை வழங்குகின்றன. தங்கத்தின் மதிப்பிலிருந்து சுமார் 60 சதவீதம் வரை கடன் வாங்க இயலும்.
3. சொத்துக் கடன்கள்: சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் வாங்கலாம். சொத்து மதிப்பிலிருந்து சுமார் 40 முதல் 70 சதவீதம் வரை கடன்கள் வாங்கலாம். இவ்வகைக் கடன்களுக்கான காலவரையறை வழக்கமாக 10 முதல் 15 வருடங்களாக இருக்கும்; இது மற்ற கடன்களைக் காட்டிலும் சற்று அதிகமாகும். இவ்வகைக் கடன்கள் அதிகமான தொகை தேவைப்படும் போது மிகவும் உபயோகமாய் உள்ளன.
செக்யூரிட்டைஸ்ட் கடன்கள், நிச்சயமாக மலிவானவையே. ஆனால், கடன் செலுத்தத் தவறும் பட்சத்தில் சொத்தின் மேல் உள்ள உரிமையை இழக்க நேரிடும் அபாயம் உண்டு.