Advertisment

பர்சனல் லோன் என்றாலே பயந்து நடுங்கும் காலம் போயாச்சி! எஸ்பிஐ-யின் அசத்தல் லோன்கள்.

கந்து வட்டி கும்பலிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
state bank savings

state bank savings

state bank of india personal loan: தொழில் தொடங்க, வீடுக்கட்ட, அவரச தேவைக்கு என பல தேவைக்காக கடன் வாங்குவது சர்வ சாதாரணம்.இதற்காக கந்து வட்டி கும்பலிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம். உங்கள் தேவைக்கு ஏற்ப குறைந்த வட்டியில் 5 விதமான கடனை எஸ்பிஐ வங்கி நடைமுறையில் வைத்துள்ளது. அதுக் குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

Advertisment

1.பர்சனல் லோன்:

கடன் தேவைப்படும் போது எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் தனிநபர் கடனை எஸ்பிஐ வங்கி அளிக்கிறது. மாத வருவாயில் 12 மடங்கு வரை தனிநபர் கடனாக எஸ்பிஐ வங்கி அளிக்கிறது.

2. கல்விக் கடன்:

எஸ்பிஐ வங்கி மாணவர் கடன், ஸ்காலர் லோன் மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான கடன் போன்றவற்றையும் அளிக்கிறது. ஸ்காலர் கடன் என்பது ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, எயிம்ஸ் போன்ற பிரீமியம் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாகும்.

கல்வி கடனைப் பொருத்தவரையில் 20 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

3. வீட்டுக் கடன்:

சொந்தமாக வீட்டை வாங்க, பழைய வீட்டை சீரமைக்க மற்றும் ஏற்கனவே உள்ள வீடு மீது வீட்டுக் கடன் பெற முடியும் . எஸ்பிஐ வீட்டு கடன் திட்டம் மூலமாகக் கடன் பெறும் போது 8.35 முதல் 8.50 சதவீதம் வரை கடன் பெறலாம்.

வாடிக்கையாளர்களின் இத்தனை நாள் தேவை தீர்ந்தது. எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு!

4. கார் லோன்:

.வாகன கடன் கீழ் புதிய கார் வாங்குபவர்களுக்குக் கடன் அளிக்கப்படுகிறது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் அனைத்து பயண வாகனங்கள், மல்டி யூடிலிட்டி வாகனங்கள் எஸ்யூவி என அனைத்து கார்களுக்குக் கடன் பெற முடியும். ஒவர் டிராப்ட் வசதியும் பெற முடியும்.

5. சொத்து கடன்:

தனிநபர்கள் சொத்துக்கள் மீது எஸ்பிஐ வங்கி கடன் அளிக்கிறது.எஸ்பிஐ வங்கி குறைந்தது 10 லட்சம் முதல் 7.5 லட்சம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் எதிரான கடனை வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியில் குறைந்தது மாத வருமானம் 25,000 ரூபாய் வரை உள்ள தனிநபர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை சொத்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற முடியும்.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment