State Bank of India : ஜூலை 1ம் தேதி முதல் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்.கள் மற்றும் வங்கிக் கிளைகளில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாற உள்ளன. Basic Savings Bank Deposit வங்கி கணக்காளர்களுக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிமுறைகள் மற்றும் அதற்கான கட்டணங்கள்
ஏ.டி.எம். பணம் எடுத்தலுக்கான விதிமுறைகள் மட்டும் கட்டணங்கள் நாளை முதல் மாற உள்ளது. பி.எஸ்.பி.டி கணக்கு வைத்திருப்பவர்கள் நான்கு முறை இலவசமாக ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் போது அனைத்து எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.-களிலும் ரூ. 15 + ஜி.எஸ்.டி. கட்டணம் வசூலிக்கப்படும். இது இதர எஸ்.பி.ஐ அல்லாத ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் போதும் பொருந்தும். அதாவது அடிப்படை வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் நான்கு முறை இலவசமாக பணத்தை எடுத்த பிற்றகு சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.
Cheque Book Charges
அனைத்து பி.எஸ்.பி.டி. வாடிக்கையாளர்களும் ஆண்டுக்கு 10 காசோலைகளை இலவசமாக பெற முடியும். அதற்கு பின்பு, தேவைப்படும் காசோலைகளுக்கு வங்கி கட்டணம் வசூலிக்கும்.
10 காசோலைகளுக்கு ரூ .40 மற்றும் ஜி.எஸ்.டி.
25 காசோலைகளுக்கு ரூ .75 மற்றும் ஜி.எஸ்.டி.
அவசர காசோலை புத்தகத்திற்கு 10 காசோலைகளுக்கு ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்
இருப்பினும், மூத்த குடிமக்கள் இந்த காசோலை பயன்பாட்டு வரம்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வங்கிகளில் பணம் வித்ட்ரா செய்யவதற்கான புதிய விதிமுறைகள்
பிபிஎஸ்டி கணக்கு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தும் நிதி-சாரா பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் ஏதும் விதிக்கவில்லை. பி.எஸ்.பி.டி. வங்கி கணக்காளார்களுக்கு கிளை மற்றும் மாற்று சேனல்களிலும் பரிமாற்ற பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை அல்லாத இதர கிளைகளில் பணம் வித்ட்ரா செய்வதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்று காலங்களில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க, எஸ்பிஐ காசோலை மற்றும் திரும்பப் பெறும் படிவத்தின் மூலம் இத்தகைய வாடிக்கையாளர்கள் பணம் திரும்ப எடுக்கும் வரம்புகளை அதிகரித்துள்ளோம்” என்று கூறியுள்ளது வங்கி.
கிளைகளில் காசோலையைப் பயன்படுத்தி பணம் திரும்பப் பெறுவது ஒரு நாளைக்கு ரூ .1 லட்சமாக உயர்த்தப்பட்டது. வங்கி கணக்கு அட்டை பயன்படுத்தி, வித்ட்ராவல் ஃபார்ம் மூலமாக பெறப்படும் பணத்தின் அளவு ரூ. 25 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil