எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இதைவிட என்ன குட் நியூஸ் சொல்ல முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு 3.5% வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்படும்

lic jeevan amar
lic jeevan amar

state bank of india saving account interest : ஸ்டேட் வங்கியில் (SBI) சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் 3.25%-மாக குறைப்படும் என அறிவித்துள்ளது. தற்போது இந்த வட்டி வீதம் 3.5%-மாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் ஒரு லட்சத்திற்கும் குறைவாக வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.5% வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் SBI தங்களது சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்துள்ளது.

எனவே ரிசர்வ் வங்கி எப்போதெல்லாம் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கிறதோ அதற்கேற்றவாறு SBI வங்கி சேமிப்பு மற்றும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் தானாகவே மாற்றி அமைக்கப்படும். இந்தப் புதிய விதிமுறையானது மே 1 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துவிட்டது.

இத்தனை நாள விடுங்க.. இனியாச்சி தெரிஞ்சிகோங்க எஸ்பிஐ-யில் இத்தனை திட்டங்கள் உங்களுக்காகவே இருக்கு!

இனி வரும் காலங்களில் எஸ்பிஐ செல்லும் வாடிக்கையாளர்கள் இந்த தகவலை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எஸ்பிஐ போன்ற பொதுத்துறை வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி இருப்பவர்கள் அல்லது தொடங்க இருப்பவர்கள் என இருவருக்குமே இது நல்ல செய்தி தானே.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: State bank of india saving account interest details

Next Story
மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க! இந்தியன் வங்கி கம்மியான வட்டிக்கு லோன் தர ரெடி!ITR Filing Last Date
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express