State Bank Of India: ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி இருப்பை அறிந்து கொள்வது எப்படி? மினி ஸ்டேட்மெண்ட் பெறுவது எப்படி? சுலபமான வழிமுறை இங்கே தரப்படுகிறது.
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய பொதுத்துறை வங்கி, பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஹெல்ப் லைன் உள்ளிட்ட வசதிகளை செய்திருக்கிறது. ஆன் லைன் பேங்கிங் காரணமாக இன்று வங்கி பரிவர்த்தனைகள் மிகவும் சுலபமாகியிருக்கின்றன.
State Bank Of India Balance Check: ஸ்டேட் வங்கியில் எளிமையான வசதி
வங்கி பரிவர்த்தைனைகள் பெருகிவிட்டதால், நமது சேமிப்புப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? என்பதை கண்டறிவது அடிக்கடி தேவையான ஒன்றாக இருக்கிறது. இதற்காக வங்கிக்கு செல்வது அல்லது ஏடிஎம் மையத்தில் சென்று பார்ப்பது ஆகியன ஒவ்வொரு முறையும் சாத்தியம் இல்லை.
இதற்காகவே வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அறிந்துகொள்ள வாடிக்கையாளர்களுக்கு சுலப வசதிகளை வங்கிகள் உருவாக்கி இருக்கின்றன. அந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ‘மிஸ்டு கால்’ மூலமாக தங்களது இருப்புப் பணத்தை தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் தாங்கள் வங்கியில் பதிவு செய்து வைத்திருக்கும் செல்போன் எண்ணில் இருந்து 09223766666 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதுமானது. அல்லது, 'BAL' என டைப் செய்து எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.
எஸ்பிஐ - யில் ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்த புதிய திட்டம்! எத்தனை பேருக்கு தெரியும்?
வங்கியில் பணம் இருப்பு தொடர்பான ‘மினி ஸ்டேட்மெண்ட்’ தேவைப்படுவோர் 09223866666 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். அல்லது, 'MSTMT' என டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். மேற்படி வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.