How to reset SBI net banking password: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப, வங்கிச்சேவைகளை, நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வங்கிச்சேவையின் மூலம், தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
நெட் பேங்கிங்கை முதலில், வங்கி அளிக்கும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு துவக்க வேண்டும். பின், உடனடியாக அந்த பாஸ்வேர்டை மாற்றிவிடவேண்டும் என்று வங்கி, தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது. ஏனெனில்,பாஸ்வேர்ட் மறக்கும் பட்சத்தில், ரீசெட் செய்ய எளிதாக இருக்கும் என்பதனடிப்படையில் வங்கி இந்த அறிவுரையை மேற்கொள்கிறது.நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்துவோர், சிலசமயங்களில் அதன் பாஸ்வேர்டை மறந்துவிட்டபடியால், பெரும் சிரமப்படுவதுண்டு. அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைகிறது இந்த செய்தி.
நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் மறந்துவிட்டால், அதனை எவ்வாறு ரீசெட் செய்வது என்று இங்கு காண்போம்
நெட் பேங்கிங் பாஸ்வேர்டை எவ்வாறு ரீசெட் செய்வது
1. எஸ்பிஐ நெட் பேங்கிங் லாகின் பக்கத்தில் உள்ள Forget Login Password என்பதை தெரிவு செய்யவும்.
2. பின் மற்றொரு திரை தோன்றும். அதில் கேட்கப்பட்டிருக்கும் யூசர்நேம், அக்கவுண்ட் நம்பர், நாடு, மொபைல் எண், பிறந்த தேதி , கப்சா கோட் உள்ளிட்டவற்றை பதிவிடவும்.
3. பின் Submit பட்டனை அழுத்தவும்
4. வங்கிக்கணக்கு உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஒன்டைம் பாஸ்வேர்டு வரும். அதனை பதிவிட்டவுடன் புதிய திரை தோன்றும். அந்த திரையில், புதிய பாஸ்வேர்டை நாம் உருவாக்கி கொள்ள முடியும்.
வங்கி வாடிக்கையாளர்கள், , ஏடிஎம் கார்டை பயன்படுத்தி லாகின் பாஸ்வேர்டையும், அல்லது நெட் பேங்கிங் புரொபைல் பாஸ்வேர்டையும் உருவாக்கி கொள்ள முடியும். புரொபைல் பாஸ்வேர்ட், நெட் பேங்கிங்கில் பெனிபிசியரிகளை இணைத்துக்கொள்ளவும், நீக்கிக்கொள்ளவும் மட்டுமல்லாது, தகவல்களை பதிவு செய்யவும் மற்றும் பேமெண்ட் லிமிட்களை மாற்றியமைக்கவும் பயன்படுகிறது.
லாகின் பாஸ்வேர்ட் ரீசெட் குறித்த மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள், வங்கியின் எந்த கிளைகளையும் அணுகி தகவல்களை பெறலாம் என்று வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.