state bank of india sbi state bank loan account sbi : வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்ட சில்லறை கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை, 2 ஆண்டுகள் வரை நீட்டத்துக்கொள்ளாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
Advertisment
எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகன உள்ளிட்ட பல்வேறு சில்லறை கடன்களைப் பெற்று இருந்து, கோவிட்-19 ஊரடங்கால் அதை செலுத்த முடியாமல் போயிருந்தால், அதைத் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 2 ஆண்டுகள் வரை நீட்டித்து வழங்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.
2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதிக்குள், எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்று அதற்கான தவணையை தவறாமல் ஒவ்வொரு மாதமும் கட்டி வந்து இருந்தால், எஸ்பிஐ வங்கி இந்த கடன் தவணையைத் தவறாமல் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்து வழங்கும்.
இந்த 2 ஆண்டு கடன் மறூசீரமிப்பு நீட்டிப்பு திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளரின் கடன் திட்டத்தின் மீது 0.35 சதவீதம் கூடுதல் வட்டி விகிதம் விதிக்கப்படும்.
எஸ்பிஐ வங்கியின் இந்த கடன் மறு சீரமைப்பு திட்டத்தைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முதலில், எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் சம்மந்தப்பட்ட வங்கி கிளையை அணுகி தவணை கால அவகாசத்தை நீட்டித்துக்கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கிகளும் கடன் மறுசீரமைப்பு அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.எஸ்பிஐ வங்கியின் https://sbi.co.in/ இணையப் பக்கத்திற்குச் சென்று, கடன் மறுசீரமைப்புக்கான தகுதியை அறிந்துகொள்வதற்கான தெரிவை கிளிக் செய்ய வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil