state bank of india sbi : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருக்கும் மிகப்பெரிய அறிவிப்பு இதோ உங்களுக்காக.
Advertisment
எஸ்பிஐ ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. எஸ்பிஐ தனது சொந்த ஏடிஎம்களை மட்டுமல்லாமல் பிற வங்கி ஏடிஎம்களையும் வரம்பற்ற முறையில் பயன்படுத்த அனுமதித்துள்ளது.
இனிமேல் எஸ்பிஐ ஏடிஎம் அல்லது வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு பணம் எடுக்க எந்தவித கூடுதல் கட்டணமும் கிடையாது. எனினும் எஸ்பிஐ அட்டையை பயன்படுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் முறை குறுகிய நாட்களுக்கு மட்டுமே அனுமதி.
நகரங்களில் (Tier-1 cities) உள்ள வாடிக்கையாளர்கள் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கப்படுவர். அதே போல் பிற நகர்ப்புற மற்றும் கிராமப்புற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்கும் வரம்பு 5 முறை மட்டுமே. எஸ்பிஐ ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு வரம்பை தள்ளுபடி செய்துவிட்டது.
எஸ்பிஐ யின் IMPS (Immediate Payment Service) கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டதாக அறிவித்துள்ளது. இணைய வழி வங்கி சேவை மற்றும் கைபேசி வங்கி ஆப் (Mobile Banking App) மூலமாக நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு IMPS கட்டணம் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. IMPS மூலம் ரூபாய் 50,000/- வரை பணத்தை எந்தவித கட்டணமும் இல்லாமல் பரிமாற்றம் செய்யலாம். இந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மேலும், வங்கி நிர்வகிக்கும் நாட்களை பொருத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil