Advertisment

பணம் இல்லாமல் தடைபடும் திருமணங்கள்...கைகொடுக்கும் பிரபல வங்கி!

திருமண இன்சூரன்ஸ் பாலிசி இந்த இழப்பை சரிசெய்யும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
state bank of india sbi

state bank of india sbi

state bank of india sbi : திருமணம் ஏதாவது ஒரு காரணத்திற்காக தள்ளிப் போனாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோ அதில் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் கௌரவக் குறைச்சல் நம்மை தலை நிமிர்ந்து நடக்கவிடாது.

Advertisment

அதனால் அந்த இழப்புகளைத் தடுக்க தற்போது திருமண இன்சூரன்ஸ் வந்திருக்கிறது.வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த திருமண இன்சூரன்ஸ் திட்டம் தற்போது இந்தியாவிற்கும் வந்திருக்கிறது.இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு ஐசிஐசிஐ லம்பார்ட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்குகின்றன.

இந்த திருமண இன்சூரனஸ் திட்டம் ஒரு நிகழ்வு சார்ந்த திட்டம் ஆகும். அதாவது இந்த திருமண இன்சூரன்ஸ் திட்டம், திருமணத்திற்கு சில நாள்களுக்கு முன்பு தொடங்கி அந்த திருமணம் முழுமையாக முடிந்தவுடன் முடிந்துவிடுகிறது.

state bank of india sbi : பெறுவது எப்படி?

ஒருவேளை மணமகன் அல்லது மணமகள் ஆகியோரின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணம் இடையில் நின்று போனால் அந்த திருமண நிகழ்வுக்கு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வழங்காது.இயற்கை இடர்பாடுகள், விபத்துகள், தீ விபத்து, நிலநடுக்கம், நகைத் திருடு போதல், பணம் திருடு போதல் போன்ற காரணங்களால் திருமணம் தடைபடும் போது அந்த இழப்பிற்கு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வழங்குகின்றன.

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் ரூ. 2 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ.8 லட்சம் ஆகிய 4 வகையான திருமண இன்சூரன்சுகளை வழங்குகிறது. இந்த இன்சூரன்சுகளுக்கான பிரீமியத் தொகை ரூ.4000 முதல் ரூ. 15,000 வரை இருக்கும்.

திருமணத் தேதிக்கு முன் 7 நாட்களில் இருந்து திருமணம் முடியும் வரை இயற்கை இடர்பாடுகள், மணமகனுக்கு அல்லது மணமகளுக்கு ஏற்படும் விபத்து, இரத்த உறவினர்களுக்கு ஏற்படும் விபத்து, நகை காணாமல் போதல் போன்றவற்றால் திருமணம் தள்ளிப் போனால் அல்லது நின்று போனால் இந்த திருமண இன்சூரன்ஸ் பாலிசி இந்த இழப்பை சரிசெய்யும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment