state bank of india sbi state bank state bank of india sbi : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ யில்
Advertisment
1 லட்சம் கோடி ரூபாயை வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைக்க வேண்டும். மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் என தனித்தனியே இந்தக் கட்டாய மினிமம் பேலன்ஸ் தொகை மாறுபடும். குறிப்பிட்ட தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதக் கட்டணத் தொகையும் வசூலிக்கப்படும்.
மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் குறைந்தபட்சம் 3,000 ரூபாயை தங்களது எஸ்பிஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும். புறநகர்ப் பகுதிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு 2,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் ஆக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ளோர் 1,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அதிகப்பட்சமாக 15 ரூபாய்+ ஜிஎஸ்டி, புறநகர்ப்புறங்களில் உள்ளோர் தவறினால் அதிகப்பட்சமாக 12 ரூபாய் +ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புறங்களில் உள்ளோருக்கு அதிகப்பட்சமாக 10 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.மாதம்தோறும் விதிக்கப்படும் அபராதத்தொகையால் வங்கி மீது வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துக்கொண்டே இருந்தனர். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஒருபக்கம் அரசு ஊக்குவித்து வரும் நிலையில், இப்படி குறைந்தபட்ச தொகை இல்லையென்றால் அபராதம் விதிப்பது, வாடிக்கையாளர்களின் சேமிப்பு பழக்கத்தை குறைக்கும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்காவிடில் அபராதம் விதிக்கப்படாது என்று எஸ்பிஐ வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. ஆனால் பலருக்கும் இந்த தகவல் தெரியவில்லை. அப்படி தெரியாதவர்களுக்கு தான் இந்த பகிர்வு மீண்டும்.
எஸ்பிஐ வங்கியில் இருக்கும் தற்போதைய விதிமுறை இதுதான். அதாவது, எஸ்.எம்.எஸ் சேவைக்கான கட்டணத்தையும் எஸ்.பி.ஐ ரத்து செய்துள்ளது.1 லட்சத்திற்கு குறைவான டெபாசிட் தொகைக்கும், அதற்கு மேலான டெபாசிட் தொகைக்கும் 3 சதவிகிதம் என்று ஒரே வட்டி சதவிகிதத்தை கடைப்பிடிக்கப்படுகிறது.
முடிந்தவரை தெரியாதவர்களுக்கு பகிருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil