சேவையும் முக்கியம், பாதுகாப்பும் முக்கியம்: எஸ்.பி.ஐ புதிய அறிவிப்புகள்

SBI New Rules: State Bank Of India வாடிக்கையாளர்களில் வசதிக்காக அப்படி இயங்கும் ஒரு mobile ATM வீடியோவை P K Gupta பகிர்ந்துள்ளார்.

State Bank Of India (SBI) Tamil News: கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக சமூக விலகலை பராமரிக்க இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது வேலை நேரத்தை மாற்றி அமைத்துள்ளது. ‘பல மாநிலங்களில் எங்கள் வங்கி கிளைகள் திறக்கும் நேரத்தை வறையரைப்படுத்தியுள்ளோம். சில மாநிலங்களில் காலை 7 முதல் 10 மணி வரையும், வேறு சில மாநிலங்களில் காலை 8 முதல் 11 வரையும், மேலும் சில மாநிலங்களில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரையும் என வறையரைப்படுத்தியுள்ளோம்’ என எஸ்பிஐ வங்கியின் Managing Director, Retail Banking P K Gupta தெரிவித்துள்ளார்.

State Bank Of India (SBI) NetBanking: ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்பு

இதற்கிடையில் எஸ்பிஐ வங்கி தனது வங்கி கிளைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக கவசங்கள் மற்றும் sanitisers களை வழங்குகிறது. வங்கியில் வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நிற்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிர்வாக பிரிவில் வேலைபார்க்கும் பணியாளர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் பணிபுரிகின்றனர். வங்கி mobile ATM சேவையை வழங்குகிறது இதனால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கிளைகளுக்கு செல்லாமல் தங்கள் பணத்தை எளிதாக எடுத்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்களில் வசதிக்காக அப்படி இயங்கும் ஒரு mobile ATM வீடியோவை P K Gupta பகிர்ந்துள்ளார்.


பணம் எடுப்பதற்காக ஏடிஎம்மை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் சமூக விலகல் உட்பட கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகளையும் எஸ்பிஐ பகிர்ந்துள்ளது.

பல்வேறு வங்கிகள் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, சின்டிகேட் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இதர வங்கிகளும் தங்கள் வேலை நேரத்தை மாற்றியமைத்துள்ளன. மேலும் நாட்டில் அதிகரித்து வரும் நோவல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவசியமற்ற வங்கி சேவைகளை ரத்து செய்துள்ளன. வங்கி சேவைகளான passbook updates, counter cheque collections போன்றவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களிடம் அவர்களது வங்கி சேவைகளுக்கு டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளன.

சமூக தொடர்பை தவிர்க்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்திக்கொள்ளும்படி National Payment Corporation of India (NPCI) வும் இந்திய குடிமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய ஊரடங்கு நிலைமையில் குடிமக்களை வீட்டிலேயே இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் பாதுகாப்பாக இருப்பதற்கு அனைத்து அத்தியாவசிய தேவை சேவை வழங்குபவர்களிடமும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்கு மாற கேட்டுக்கொள்கிறோம் என NPCI யின் MD மற்றும் CEO வான Dilip Asbe கூறியுள்ளார்.

 

 

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close